Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக வசமான எடப்பாடி நகராட்சி... சொந்த தொகுதியில் இபிஎஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: எடப்பாடி நகராட்சியில் திமுகவின் கொடி பறக்கிறது. நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் எதிர்கட்சித்தலைவர் இபிஎஸ் கோட்டையை தகர்த்து வெற்றிக்கொடியை நாட்டி அதிமுகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 Salem District Local Body Election Election Results 2022: Edapadi Municipal Councils Election Results

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் 30, தி.மு.க.-29, பா.ம.க-9, பா.ஜ.க.-10, அ.ம.மு.க.-2, தே.மு.தி.க.-2, மக்கள் நீதி மையம்-1, ஆம்ஆத்மி - 4, காங்கிரஸ்-1 மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 7 என மொத்தம் 95 வேட்பாளர்கள் எடப்பாடி நகராட்சியில் நகர மன்ற உறுப்பினருக்கான தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

இதில் அதிமுக சார்பில் முன்னாள் நகராட்சித் தலைவரும், அதிமுக ஜெ பேரவை நகர் செயலாளருமான கதிரேசனே இந்த முறை வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இது கவுரவப் பிரச்சினை என்பதால், பழனிசாமியே நேரடியாக அவருக்கு வாக்குக்கேட்டார். இதேபோல திமுக கூட்டணியும் தீவிரமாக தேர்தல் வேலை செய்தது.

சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் எடப்பாடி நகராட்சி, அரசிராமணி, பூலாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இதில் 15 வார்டுகள் கொண்ட அரசிராமணி பேரூராட்சியில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியிலும் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றது. சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் வார்டில் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் எடப்பாடி நகராட்சியை திமுக முதன்முறையாக தனது வசப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+