இரவோடு இரவாக.. சேலத்தில் நடந்த சம்பவம்.. ஒரு பெண்ணுக்காக கட்டி உருண்ட 2 காதலர்கள்.. இப்படி ஆயிருச்சே
சேலம்: சேலத்தில் ஒரு பெண்ணுக்காக, 2 நபர்கள் கடுமையாக மோதிக் கொண்டார்கள்.. கடைசியில் ஒரு கொலை வரை இந்த விவகாரம் சென்றுவிட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. சேலத்தில் என்ன நடந்தது? யாரந்த பிரபல ரவுடி?
சேலத்தை அடுத்த வீராணம் வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர் குமரவேல்.. 29 வயதாகிறது.. இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.. கடந்த 6 வருடங்களுககு முன்பு, தன்னுடைய தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இவரைவிட்டு, மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

நட்பு காதல்: இதையடுத்து, அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன், குமரவேலுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மலர்ந்து, இருவரும் நெருங்கி பழகினார்கள்.. பல இடங்களுக்கு சுற்றித்திரிந்து உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஆனால், அந்த பெண்ணுக்கு, பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. 38 வயதான பிரகாஷ், வீராணம் துளசிமணியனூரை சேர்ந்தவர் ஆவார்.. பெண்ணுடன் நெருங்கி பழகிய நிலையில், அவரும் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த விஷயம் குமரவேலுவுக்கு தெரிந்து பிரகாஷை கண்டித்திருக்கிறார்.. ஒருகட்டத்தில் இருவருமே மோதிக் கொண்டார்கள்.
குடிபோதை: சம்பந்தப்பட்ட பெண்ணை வைத்து, இருவருக்கும் இடையில் பலமுறை தகராறு வந்திருக்கிறது.. அந்தவகையில், நேற்றுமுன்தினம், இரவு 9 மணியளவில் குமரவேல், துளசிமணியனூர் அய்யனாரப்பன்கோயில் அருகே மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.. அப்போது பிரகாஷ், தன்னுடைய நண்பர்கள் மாணிக்கம், கனகராஜ் ஆகியோரை அழைத்து வந்து, தன்னுடைய காதலியுடனான தொடர்பை கைவிடும்படி கூறி தகராறு செய்துள்ளார்..
பிறகு அந்த கும்பல், திடீரென குமரவேலை சரமாரியாக தாக்கி, அவரை கீழே தள்ளி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பினார்கள். இரவு நேரத்தில் நடந்த இந்த கொலையால், அந்த பகுதியே அதிர்ந்துபோய்விட்டது.. ஆனால், உடனடியாக இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக வழக்கு பதிந்து பிரகாஷ், மாணிக்கம், கனகராஜ் ஆகிய 3 பேரையும், இரவோடு இரவாக மடக்கி பிடித்து கைது செய்துவிட்டனர்..
மிகப்பெரிய ரவுடி: இதில் கைதாகியிருக்கும் பிரகாஷ், மிகப்பெரிய ரவுடி என்கிறார்கள். அடிதடி, வழிப்பறி, கஞ்சா வழக்குகள் இன்னமும் இவர் மீது நிலுவையில் உள்ளது.. ரவுடி லிஸ்ட்டில் இருக்கும் பிரகாஷ், ஒருமுறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதாகியிருக்கிறார். தற்போது கொலை வழக்கிலும் கைதாகி உள்ளார். ஒரு பெண்ணுடன் 2 பேர் தகாத உறவு வைத்துக்கொண்டதுடன், இந்த மோதல் கொலை வரை சென்றுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications