பீர் பாட்டிலும் கையுமாக நின்ற திவ்யா.. சரமாரி திட்டு.. வேதனையில் தற்கொலை.. சடலத்தை எரித்த பெற்றோர்

சேலம் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பீர் பாட்டிலுடன் மாணவி , வேதனையில் தற்கொலை.. சடலத்தை எரித்த பெற்றோர்

    சேலம்: கிளாஸ் ரூமுக்குள் வரும்போதே.. பீர் பாட்டிலுடன் வந்தாள் அந்த பிளஸ் டூ மாணவி.. இதை பார்த்து ஷாக் ஆகி டீச்சர் திட்டியதில், அந்த மாணவி தற்கொலையே செய்து கொண்டுள்ள சம்பவம் சேலத்தை அதிர வைத்துள்ளது.

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி சின்ன சோரகை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நங்கவள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார்.

    போன 15-ம் தேதி திவ்யாவுக்கு பர்த்டே.. அதனால் பார்ட்டி என்ற பெயரில் பீர் பாட்டில்களை வாங்கி பைக்குள் மறைத்து கொண்டு வந்திருக்கிறாள். அத்தனை பாட்டில்களும் எப்படி திவ்யாவுக்கு கிடைத்தது என்று தெரியவில்லை.

    ஆசிரியை

    ஆசிரியை

    கிளாஸ் ரூமில் இருந்த மற்ற மாணவிகளிடம் அந்த பீர் பாட்டிலையும் கையில் எடுத்து காட்டி உள்ளார். அந்த நேரம் பார்த்து கிளாஸ் டீச்சர் உள்ளே வந்திருக்கிறார். திவ்யா பீர் பாட்டிலும் கையுமாக நிற்பதை கண்டு அதிர்ந்தார்.. அதனால் சரமாரியாக திட்ட ஆரம்பித்து விட்டார்.

    5 தோழிகள்

    5 தோழிகள்

    அத்துடன், திவ்யா உட்பட அவளது தோழிகள் 5 பேரையும் கூட்டி கொண்டு போய் தலைமை ஆசிரியர் முன்னாடி நிற்க வைத்தார். இருவரும் சேர்ந்து மாணவிகளை திட்டினர். "இந்த பீர் பாட்டில்களை வாங்கி வந்தது யார்? யார்ன்னு சொல்லலைன்னா, 5 பேருக்கும் டி.சி. தந்துவிடுவேன் என்று மிரட்டினார்.

    பீர் பாட்டில்கள்

    பீர் பாட்டில்கள்

    உடனே பயந்து போன மாணவிகள், "திவ்யாவுக்கு பர்த்டே.. அதனால எங்களுக்குப் பார்ட்டி தர பீர் பாட்டில் வாங்கி வந்தாள்" என்றனர். இதையடுத்து திவ்யாவின் பெற்றோர் ஸ்கூலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்களையும் அசிங்கமாக திட்டியது பள்ளி நிர்வாகம்.

    அவமானம்

    அவமானம்

    இதனால் மன உளைச்சல், அவமானம் தாங்காத திவ்யா யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால், குடும்ப மானம் போகும், கேஸ், விசாரணைன்னு நடக்கும் என்று பயந்த பெற்றோர்களும், ராத்திரியோடு ராத்திரியாக திவ்யாவின் உடலுக்கு தீ வைத்து எரித்து விட்டனர்.

    எரித்தனர்

    எரித்தனர்

    ஆனால் விஷயம் பொழுது விடிந்ததும் கசிந்துவிட்டது.. நங்கவள்ளி விஏஓ, போலீஸ் ஸ்டேஷன் வரை தெரிந்து வந்துவிட்டார்கள். யாருக்குமே தகவல் சொல்லாமல் பெற்றோர்கள் மகளை எரித்துள்ளனர் என்பதால், விஏஓ தந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+