சேலம் சாமியார் வீட்டில் ஸ்கூல் யூனிபார்ம்.. லேப்டாப்பில் தூக்கி வாரிப்போட்ட காட்சி.. என்ன நடந்தது?
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வசூலுக்காக சென்ற ஒரு சிறுமி... அங்கே நடந்த ஒரு சம்பவத்தை வீட்டில் சொல்ல, விஷயம் அப்படியே போலீஸ் வரை போய்விட்டது.. அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபரின் இடத்துக்கு சென்றபோதுதான், அடுத்தடுத்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியே வந்தன. உடனே அவர் பயன்படுத்திய லேப்டாப், செல்போனை ஆய்வு செய்தபோது, போலீசாருக்கே தூக்கி வாரிப்போட்டுள்ளது. அப்படி என்ன நடந்தது சேலம் வாழப்பாடியில்?
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது வெள்ளாளக்குண்டம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் விஜயராஜா. 50 வயதான இவர் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களை பழுதுபார்க்கும் கடை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வந்துள்ளார்.

சேலம் வாழப்பாடி சாமியார்
ஆனாலும், தன்னை ஒரு ஆன்மீகவாதி போல காட்டிக் கொள்வாராம்.. பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகவும் அந்த பகுதி மக்களிடம் சொல்லி வந்ததாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, இதற்காகவே "சனீஸ்வரா" என்ற பெயரில் பரிகார நிலையம் ஒன்றையும் நடத்தி, மாந்திரீகம் போன்றவற்றையும் செய்து வந்திருக்கிறார்.. உள்ளூர் நபர் என்பதால், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி பெண்கள் உள்ளிட்டோர் அவரை அணுகி வந்திருக்கிறார்கள்..
பெண்ணுக்கு பாலியல் சீண்டல்
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோயிலுக்கு வசூல் செய்வதற்காக சிறுமி ஒருவர் அவரது பரிகார நிலையத்துக்கு சென்றிருக்கிறார்.. அப்போது அங்கிருநத விஜயராஜா, சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டியிருக்கிறார்.. இதனால் அதிர்ச்சியும் பயமும் அடைந்த சிறுமி, அங்கிருந்து வெளியேறி நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே போலீசாரும் விசாரணையை துவங்கினர்.. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழியும், இதே விஜயராஜா தன்னிடமும் அத்துமீறியதாக சொல்லி அதிர்ச்சியை தந்தார்..
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும், சில இளைஞர்கள் விஜயராஜாவின் பரிகார நிலையத்துக்கே நேரடியாக சென்றுவிட்டார்கள்.. ஆனால், பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டே உள்ளே சென்றிருக்கிறார்கள்.. அங்கே, பல பள்ளி மாணவிகளின் யூனிபார்ம்கள் இருந்ததை கண்டு மொத்த பேரும் வெலவெலத்துப் போய்விட்டார்கள்..
லேப்டாப்பில் அதிர்ச்சி
அங்கிருந்த லேப்டாப்பை எடுத்து பார்த்த போது, அதில் சாமியார் விஜயராஜா ஏராளமான பள்ளி சிறுமிகள் மற்றும் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், விஜயராஜா நடத்தி வரும் எலக்ட்ரிக்கல்ஸ் கடையை அடித்து நொறுக்கினார்கள்.. பிறகு, அந்த பகுதியில் பதுங்கி இருந்த விஜயராஜாவை மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்து வாழப்பாடி போலீசிலும் ஒப்படைத்தனர்.
இதையடுத்து விஜயராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.. பரிகாரம் செய்வதாக கூறி, தன்னிடம் உதவி நாடி வந்த பெண்களிடம் விஜயராஜா உல்லாசமாக இருந்துள்ளதும் தெரியவந்தது. அத்துடன் அவரது லேப்டாப், செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்ததில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் ஆபாச படங்கள் இருந்துள்ளன. மேலும், மாந்திரீக சாமியாரின் லேப்டாப்பில், பல பள்ளி மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சாமியாரின் ஆபாச வீடியோ ஒன்று மொத்த பேரையும் தூக்கி வாரிப்போட்டுள்ளது.. அதில் உள்ளூரை சேர்ந்த பெண் ஒருவர், வீடியோவில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த நிர்வாண வீடியோவை பள்ளி மாணவிகளிடம் காண்பித்து, இதுபோல் நீங்களும் போஸ் கொடுத்தால், நிறைய பணம் தருவேன் என்று விஜயராஜா பள்ளி மாணவிகளிடம் ஆசைவார்த்தை சொன்னாராம்..
வீடியோவுக்கு 50 ஆயிரம்
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், "இந்த ஆபாச வீடியோக்களை என்ன செய்வாய்?" என்று விஜயராஜிடம் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு அவர், "ஆபாச படங்களை எடுத்து குறிப்பிட்ட வெப்சைட்டிற்கு அனுப்பினால், ஒரு வீடியோவுக்கு ரூ.50 ஆயிரம் தருவார்கள்.. அதனால், நான் ஒரே ஒரு வீடியோ மட்டும் எடுத்து அந்த வெப்சைட்டிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அவர்கள் ரூ.5 ஆயிரம் மட்டுமே தந்து என்னை ஏமாற்றி விட்டார்கள்" என்கிறாராம் விஜயராஜா,.
இதையடுத்து, சாமியார் விஜயராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர் ஆபாச வீடியோவை அனுப்பிய சமூக வலைதள முகவரியை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.. விஜயராஜா ஆபாச வீடியோக்களை வேறு யாருக்காவது அனுப்பியுள்ளாரா?, வீடியோக்களை காட்டி சிறுமிகள் மற்றும் பெண்களை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டாரா எனவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்..
இதனிடையே, சாமியார் வீட்டுக்கு இதுவரை, மாந்திரீகம், பரிகார பூஜைக்காக, தங்களது குழந்தைகளை அழைத்து சென்று வந்த பெற்றோர்கள் பீதியிலும், கலக்கத்திலும் உள்ளார்களாம்..!!


Click it and Unblock the Notifications
