தங்க நகையை பார்த்ததும் தடுமாறிய புத்தி.. சேலம் அருகே அசிங்கப்பட்ட விஏஓ.. தெரிய வந்த ட்விஸ்ட்
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கருமாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம்மாள் என்பவர் தென்னங்கீற்று தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் தென்னங்கீற்று விலை கேட்பது போல் நடித்து ஸ்ரீரங்கம்மாளிடம் பேச்சு கொடுத்து தங்க நகையை அபேஸ் செய்துவிட்டு ஒருவர் தலைமறைவானார். அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் என்பது தெரியவந்தது. அந்த விஏஓவை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கருமாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீரங்கம்மாளுக்கு 62 வயது ஆகிறது. இவர், அந்த பகுதியில்தென்னங்கீற்று தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 26-ந் தேதி ஸ்ரீரங்கம்மாளின் வீட்டுக்கு ஒரு நபர் வந்துள்ளார். வந்த நபர், தென்னங்கீற்று விலை கேட்பது போல் நடித்து ஸ்ரீரங்கம்மாளிடம் பேச்சு கொடுத்து ஒன்றே கால் பவுன் தங்க நகையை அபேஸ் செய்து விட்டு எஸ்கேப் ஆனார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே பெண்ணை ஏமாற்றி நகையை அபேஸ் செய்தது கள்ளக்குறிச்சி மாவட்டம் தோட்டப்பாடி பகுதியை சேர்ந்த பிரபு (47) என்பது தெரிய வந்தது. இவர், கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து ஒழுங்கீன செயலால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் தென்னங்கீற்று வாங்குவது போல் பேச்சு கொடுத்ததுடன், வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருவதாகவும், இதனால் கடன் வாங்கி திருப்பாத நகைகள் ஏலம் விடப்படுவதாகவும், அதனை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் கூறி ஸ்ரீரங்கம்மாளை பிரபு ஏமாற்றி நகையை அபேஸ் செய்து சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாயின.
பிரபுவின் தந்தை கிராம உதவியாளராக பணிபுரிந்த போது இறந்தார். இதனால் பிரபுக்கு வாரிசு வேலையாக கிராம நிர்வாக அதிகாரி பணி கிடைத்திருக்கிறது. ஆனால் பிரபு பணியில் சேர்ந்த காலம் முதலே, சரிவர பணிக்கு வராமலும், மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 2015-ம் ஆண்டு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சேலம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், திட்டக்குடி, திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் அரசு வேலைகளில் இருப்பதாக கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் பணம் மோசடியில் ஈடுபட்டதும், இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. ஒழுங்கீன செயலால் பிரபு கிராம நிர்வாக அதிகாரி பணியில் இருந்து தொடர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்ததை கண்ட போலீசார், அவரை வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications