லாரி டிரைவரிடம் சசிகலாவுக்கு வந்த காதல்.. இவரெல்லாம் ஒரு பெண்ணா? ஆத்தூர் அரசு பள்ளி மாணவி பரிதாபம்
சேலம்: சேலம் தாய் செய்த கொடுமையை கேட்டு, ஒட்டுமொத்த பேரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.. பள்ளி ஆசிரியை மேற்கொண்ட முயற்சி காரணமாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்டம், ஆத்துரை சேர்ந்த அந்த சிறுமிக்கு 14 வயதாகிறது.. அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்... நாளுக்கு நாள் சோகத்துடனும், சோர்வுடனும் சிறுமி காணப்படுவதை பள்ளி ஆசிரியர்கள் கவனித்துள்ளனர்.

அதனால், சிறுமியை அழைத்து கேட்டபோதுதான், அந்த பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.. அதாவது வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.. குமரேசன் ஒரு லாரி டிரைவர்.. 50 வயதாகிறது.
பள்ளி ஆசிரியை அதிர்ச்சி
இதைக்கேட்டு அதிர்ந்த பள்ளி வகுப்பு ஆசிரியை, இந்த விஷயத்தை மாணவியின் அப்பாவிடம் சொல்லவும், அவர் உடனடியாக சேலம் குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் சேலம் மகளிர் போலீசார் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், லாரி டிரைவர் குமரேசனுக்கும், சிறுமியின் அம்மா சசிகலாவுக்கும் இடையே தகாத உறவு இருப்பது தெரியவந்தது..
அதுமட்டுமல்ல, கடந்த பிப்ரவரி 17ம்தேதி, வீட்டில் இருந்த தன்னுடைய மகளை, காதலன் குமரேசனுடன் உல்லாசமாக இருக்கும்படி, கட்டாயப்படுத்தியதே சசிகலா தானாம்.. ஆனால், இதற்கு சிறுமி ஆரம்பத்திலேயே கடுமையான எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்துள்ளார்.. ஆனாலும், சிறுமியை குமரேசன் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
அம்மா தான் எல்லாத்துக்கும் காரணம்
இதற்கு பிறகு, பிப்ரவரி 20, மார்ச் 3ம் தேதிகளிலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்... சிலசமயம் ஒரே நாளில், இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.. இந்த அத்தனை கொடுமைகளுக்கும், சிறுமியின் தாய் சசிகலாதான் உடந்தையாக இருந்துள்ளார்..
இதையடுத்து ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் குமரேசன், அம்மா சசிகலா இருவரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர்.. கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளும் அவர்கள் மீது பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
நம்பிக்கை துரோகம்:
சசிகலாவுக்கு 35 வயதாகிறது.. சிறுமியின் தந்தையும் லாரி டிரைவர் ஆவார்.. இவரது நண்பர்தான் குமரேசன்.. தன்னுடைய நெருங்கிய நண்பன் என்ற முறையில் வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.. ஆனால், இதுவே சசிகலாவுடன் கள்ளக்காதலில் கொண்டுபோய் முடிந்துள்ளது.. மனைவியின் கள்ளக்காதல், மகளை மிரட்டி பலாத்காரம் என இருவிதமான அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறாராம் சிறுமியின் தந்தை...!!
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications