அடுத்த ஷாக்.. ஊர்க்காவல் படை பெண்ணுக்கு கத்திக்குத்து.. சேலம் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பயங்கரம்
பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப சேலம் பஸ் நிலையத்தில் பஸ்சில் ஊர்க்காவல்படை யூனிபார்மில் இருந்த அஞ்சலி தேவி மீது பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டது.
சேலம்: சேலம் பழைய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் இன்று யூனிபார்மில் இருந்த ஊர்க்காவல் படை பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஊர்க்காவல் படையில் வேலை செய்து வருகிறார். இவர் இன்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது அவர் ஊர்க்காவல் படை யூனிபார்ம் அணிந்து பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். இந்த வேளையில் கிச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். சதீஷ் குமாருக்கும், அஞ்சலி தேவிக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து
இந்நிலையில் தான் பஸ்சில் இருந்த அஞ்சலி தேவியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அஞ்சலி தேவி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரை விரட்டி சென்ற சதீஷ் குமார், அஞ்சலி தேவியின் தோள்பட்டையில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் சரிந்து விழுந்து அஞ்சலி தேவி கதறினார். இதையடுத்து சதீஷ் குமார் அங்கிருந்து ஓடிவிட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை
இதையடுத்து உடனடியாக அஞ்சலி தேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கத்திக்குத்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அஞ்சலி தேவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்காக தன்னை சதீஷ் குமார் கத்தியால் குத்தினார் என்பது பற்றி அஞ்சலி தேவி போலீசாரிடம் விளக்கமாக கூறியுள்ளார்.

போலீஸ் சொல்வது என்ன?
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: அஞ்சலி தேவியை கத்தியால் குத்திய சதீஷ் குமார் ரேஷன் கடையில் தற்காலிகமாக பணியாற்றினார். இந்த வேளையில் அஞ்சலி தேவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் தவணை முறையில் பணம், நகைகளை பெற்றுள்ளார். மொத்தம் ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகைகளை அஞ்சலி தேவி, சதீஷ் குமாரிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் பணி பெற்று கொடுக்கவில்லை. மாறாக அவர் வேறு பணிக்கு மாறியுள்ளார்.

காரணம் என்ன?
இதனால் கொடுத்த நகை, பணத்தை திரும்ப தரும்படி அஞ்சலி தேவி கேட்டுள்ளார். அப்போது கூடுதலாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து சதீஷ் குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரால் கோபமடைந்த சதீஷ் குமார் அஞ்சலி தேவியை கத்தியால் குத்தியுள்ளார்'' என்றனர். மேலும் இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்தனர்.

பரபரப்பு
சேலம் பழைய பஸ் நிலையம் என்பது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த நிலையில் ஊர்க்காவல் படை யூனிபார்மில் இருந்த அஞ்சலி தேவியை, சதீஷ் குமார் பட்டப்பகலில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications