Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் ஒரே அதிர்ச்சி.. உடம்பெல்லாம் "தின்னர்".. குளிக்க போன மனைவி.. அந்த கொடூர கணவர்.. ஐயோ பாவம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: மனைவி இறந்தது குறித்து, போலீசாரிடம் கணவர் தந்த வாக்குமூலம், சேலத்தில் பரபரப்பை தந்து வருகிறது.. என்ன நடந்தது மேட்டூரில்?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ளது சேலம் கேம்ப் காந்திநகர்.. இங்கு வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்.. 50 வயதாகிறது.. இவர் ஒரு பெயிண்டர்... மனைவி பெயர் தமிழரசி.. 37 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.

Salem incident and Why did Husband take this Big Decision, what happened actually in Salem Mettur

தம்பதிக்கு நடுவில் கருத்து வேறுபாடு காரணமாக நிறைய தகராறும், மனஸ்தாபமும் வந்துபோயுள்ளது.. இப்படித்தான், கடந்த 24ம் தேதியும், வழக்கம்போல் சண்டை வந்துள்ளது.

எல்லைமீறல்: அப்போது, வீட்டில் கணவன், மனைவி மட்டுமே இருந்திருக்கிறார்கள்.. இதனால், இவர்களீன் சண்டையை தடுக்க யாரும் இல்லாததால், தகராறு எல்லைமீறி சென்றுவிட்டது.. அப்போது ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த தமிழரசி, தற்கொலை செய்து கொள்வதற்காக, திடீரென தன்னுடைய உடலில் தின்னரை ஊற்றிக்கொண்டார்.. பிறகு சிறிது நேரத்தில் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில், தமிழரசி அலறி துடித்தார்..

அந்த அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று, அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், அதற்குள் உடலில் தீக்காயங்கள் அதிக அளவில் ஏற்பட்டுவிட்டது..

தீவிர சிகிச்சை: எனவே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையும் ஆரம்பமானது. அதற்குள் இந்த தகவல் கிடைத்து, கருமலைக்கூடல் போலீசார் மருத்துவமனைக்கே சென்றுவிட்டார்கள்.. சிகிச்சை பெற்று வந்த தமிழரசியிடமும் விசாரித்தனர். ஆனால், அந்த நேரத்தில் தமிழரசியின் உடல்நிலை படுமோசமாகியிருந்தது.. எனவே, மரண வாக்குமூலத்தை சேலம் ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் தமிழரசியிடம் பெற்றுக் கொண்டார்.

அந்த வாக்குமூலத்தில் தமிழரசி சொன்னபோது, "வீட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக, என்னுடைய உடலில் தின்னரை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன்.. அப்போது திடீரென பிள்ளைகளின் ஞாபகம் வந்துவிட்டது. அதனால், தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட்டு, உடனே உடலில் தண்ணீர் ஊற்றிக்கொள்ள சென்றேன். இதை பார்த்த என்னுடைய கணவர், என் மீது நெருப்பை பற்ற வைத்து போட்டுவிட்டார்" என்று கூறினார்.

விசாரணை: இந்நிலையில், நேற்று மாலை, தமிழரசி இறந்துவிட்டார்.. எனவே, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி கருமலைக்கூடல் போலீசார் மீண்டும் விசாரணையை துரிதப்படுத்தினர்.. ஈவிரக்கமில்லாமல் மனைவிக்கு நெருப்பு வைத்த, ராமகிருஷ்ணனையும் அதிடியாக கைது செய்தனர். அப்போது, ராமகிருஷ்ணன் தந்த வாக்குமூலத்தில் சொன்னதாவது:

"கடந்த சில மாதங்களாகவே தமிழரசிக்கு இன்னொரு நபருடன் பழக்கம் இருந்து வந்தது.. இது எனக்கு தெரியவந்ததால், தகாத உறவை கைவிடும்படி சொன்னேன்.. தமிழரசியையும் கண்டித்து வந்தேன்.. இதுதான், எங்களுக்குள் தகராறு ஏற்பட காரணமாக இருந்தது..

பரபரப்பு: சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் தமிழரசி தற்கொலை செய்துகொள்வதற்காக உடலில் தின்னரை ஊற்றிக்கொண்டார்.. அதற்கு பிறகு மனம்மாறி குளிக்க சென்றார்.. அப்போதுதான், அவரது உடலில் தீயை பற்ற வைத்து போட்டு, எரித்து விட்டேன் என்று ராமகிருஷ்ணன் வாக்குமூலம் தந்துள்ளாராம். இந்த சம்பவம் சேலத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+