சொன்ன மாதிரியே செஞ்சிட்டாங்க.. சேலமே தலைநிமிர்ந்து பார்க்கும் திட்டம்.. 1 வருடத்தில் நடந்த மாஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட சேலம் நியோ டைடல் பார்க் கட்டுமானம் 90 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த வருட இறுதியில் அந்த ஐடி பார்க் திறக்கப்பட உள்ளது.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு உடனடியாக டெண்டர் விடப்பட்டது. சேலத்தில் உள்ள ஓமலூர் தாலுகாவில் உள்ள ஆனைகவுண்டன்பட்டி/கருப்பூர் கிராமத்தில் டைடல் நியோ பூங்கா ₹22.5 கோடி மதிப்பில் தரை+3 தளங்களுடன் கட்ட டெண்டர் கோரப்பட்டது. இதற்கான டெண்டர் முடிந்து கட்டுமானம் தற்போது 80 சதவிகிதம் முடிந்துள்ளது.

Salem IT Park with Ground 3 floors at Anaikavundanpatti Karuppur Village almost finished

இந்த டைடல் நியோ பூங்காவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இங்கே வேகமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களின் புகைப்படங்கள் மக்களை கவர்ந்து உள்ளன.

வேகமான வளர்ச்சி" சமீபத்தில்தான் விழுப்புரம் மாவட்டத்தில் ஐடி பூங்கா திறக்கப்பட்டது. 5 மாடி கட்டிடமாக இரண்டு பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நவீன தோற்றத்தில் இந்த ஐடி பார்க் அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் நியோ டைடல் ஐடி பூங்கா கட்டப்பட்டுள்ளது. அங்கே உள்ள 63,000 சதுர அடி பரப்பளவுள்ள G+4 அலுவலக இடம் தற்போது வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. TIDEL Neo IT Park என்ற பெயரில் இந்த ஐடி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரத்தில் அமைக்கப்படும் இந்த பூங்காவின் கட்டுமானம் நிறைவடைந்து உள்ளது. IT நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கான செயல்முறை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

மேலும் வருது ஐடி பார்க்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் பூங்கா; சமீபத்தில்தான் தஞ்சையில் , 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன தற்போது நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஹை ரைஸ் : இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க்க தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம் கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. தஞ்சையிலும் இந்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

திருச்சி பூங்கா: இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.

இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது.

இங்கே கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இன்றுதான் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) அமைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+