தங்கம் விற்கிற ரேட்டுக்கு சேலம் நகைக்கடை போட்ட 100% ஆஃபர்.. அலை அலையா திரண்டவர்களுக்கு ட்விஸ்ட்
சேலம்: சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடை ஒன்று செய்கூலி, சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி என விளம்பரம் செய்து இருந்தது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள், நேற்று மாலை கடைக்கு குவிந்த நிலையில், கடைசியில் மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்படி கடை உரிமையாளர் என்னதான் செய்தார்.. விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை கிட்டதட்ட 50 ஆயிரம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தங்கம் விலை சுமார் ரூ.57,200 என்று இருந்தது.

நிற்காமல் உயரும் தங்கம் விலை
அப்போது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தங்கம் விலை லட்ச ரூபாயை தொட்டாலும் வியப்பதற்கு இல்லை என நகைப்பிரியர்கள் பேசிக்கொண்டு இருந்த நிலையில், இந்த ஆண்டே நகை பிரியர்கள் கனவில் கூட நினைக்காத அளவிற்கு விலையானது உயர்ந்துள்ளது. 1 லட்சத்தை தாண்டியும் தங்கம் விலை நிற்காமல் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலைதான் இப்படி என்றால் வெள்ளி விலையும் ஏட்டிக்கு போட்டியாக தற்போது உயர்ந்து வருகிறது. என்னதான், தங்கம் வெள்ளி போட்டிக்கொண்டு உயர்ந்தாலும் மக்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைந்தபாடில்லை. தங்க நகைகளை வாங்க ஆர்வத்துடன் நகை கடைக்கு செல்வதையே பார்க்க முடிகிறது. இதனால், வாடிக்கையாளர்களை கவர நகைக்கடைகளும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன.
100 சதவீதம் தள்ளுபடி ஆஃபர்
அந்த வகையில், சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடை வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் ஒன்றை அறிவித்தது. அதை நம்பி போனவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏவிஆர் ஸ்வர்ண மகால் என்ற நகைக்கடை உள்ளது.
இந்த கடையில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கினால் செய்கூலி, சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று கடை சார்பாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாகவும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம்
இதனை அறிந்த வாடிக்கையாளர்கள், 100 சதவீதம் தள்ளுபடி என்பதால் பிற்பகல் முதலே குவிய தொடங்கினர். மாலை 6 மணியளவில் கடை முன்பாக கூட்டம் கூட தொடங்கியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், கடையின் உரிமையாளர், ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டார். இதனால் தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
வாடிக்கையாளர்கள் ஆதங்கம்
தொடர்ந்து கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "காலையில் 11 மணிக்கே நாங்கள் வந்தோம். அப்போது எல்லா நகைகளும் விற்று தீர்ந்துவிட்டன. எல்லாரும் டோக்கன் போட்டுவிட்டு போய்விட்டார்கள். உள்ளே கலெக்ஷனே இல்லை.
பாதி பேர் வெளியே வரும் போது ஷட்டரை பூட்டிவிட்டார்கள். நகையை அடைமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தை வைத்து வாங்க வந்தோம். திருவண்ணாமலையில் இருந்து பஸ் பிடித்து வந்தால் கடையில் டோட்டல் வேஸ்ட்" என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications