சேலத்தில் வாடகை வீட்டில் காதலியுடன் தங்கியிருந்த வெளிநாட்டு நபர்.. முதல் மாடியில் இப்படியா நடக்கணும்

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஒரே அறையில் தன்னுடைய காதலியுடன் தங்கியிருந்துள்ளார் வெளிநாட்டை சேர்ந்த டேனியல்.. மூக்கு முட்ட மது அருந்திவிட்டு, மாடியிலுள்ள சுவரில் உட்கார்ந்திருந்தாராம்.. திடீரென கீழே விழுந்துவிடவும், பதறிப்போய் ஓடிவந்துள்ளார் காதலி.. உடம்பெல்லாம் காதலனுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணையை சேலம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

கென்யா புசியா மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் கெகோங்கோ டேனியல்.. 29 வயாகிறது. இவர் சேலத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிப்பதற்காக கடந்த 2021-ல் வந்திருக்கிறார்..

Salem Rental House Girl friend

வாடகை வீட்டில் காதலி

இதற்காக கன்னங்குறிச்சி அண்ணா நகரிலேயே, ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்.. ஆனால் தொடர்ந்து படிக்காமல், பாதியிலேயே என்ஜினியரிங் படிப்பை நிறுத்திவிட்டார்.. எனினும் அதே வீட்டில்தான் தங்கியிருந்தார்..

இவரது காதலி பெயர் நபுகீரா ஹெலன்.. 33 வயதாகிறது.. இவரும் உகாண்டாவை சேர்ந்தவர்.. புதுச்சேரியில் படித்து வருகிறார். ஆனால், இவரும் ஒழுங்காக கல்லூரிக்கு படிக்க போவதில்லையாம். எந்நேரமும் டேனியலுடன் அதே ரூமில்தான் தங்கியிருந்து வந்துள்ளார்..

தலைக்கேறிய போதை

இந்நிலையில், கடந்த 27ம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார் டேனியல்.. பிறகு வீட்டின் மாடியின் சுவரில் உட்கார்ந்திருந்தபோது, திடீரென தவறி கீழே விழுந்துவிட்டார்.. அவரது அலறல் சத்தத்தை கேட்டு, ஹெலன் கதறிக்கொண்டு ஓடிவந்து தூக்கினார்.. பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் உதவிக்கு ஓடிவந்து, டேனியலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்..

டேனியல் தலை, இடுப்பு, கால் ஆகிய இடங்களில் படுகாயங்கள் அதிகமாக இருந்தன.. இது தொடர்பாக தகவலறிந்து கன்னங்குறிச்சி போலீசார் மருத்துவமனைக்கே விரைந்து வந்து விசாரித்தனர்..

போலீஸ் விசாரணை

காதலியுடன் வீட்டில் தங்கியிருந்தது குறித்து டேனியல் கூறியிருக்கிறார். டேனியல் உடம்பிலுள்ள காயங்களை கண்ட போலீசார், காதலியுடன் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? என்று கேட்டனர். தங்களுக்குள் எந்த தகராறும் இல்லை என்றும் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாகவும் டேனியல் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டேனியல் திடீரென உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். முதல் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்தாராம் டேனியல்.. இதையடுத்து காதலி ஹெலனிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. தற்போது டேனியல் உடலை சொந்த ஊர் எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேலம் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+