சேலத்தில் கடும் போட்டி.. திமுக vs அதிமுக.. வெற்றி யாருக்கு? பாமகதான் ஹைலைட்! தந்தி டிவி எக்ஸிட் போல்
சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில் திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றும், எனினும் 5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை வீழ்த்தி திமுக வெற்றி பெறும் என்றும் தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுகவிற்கு வெற்றிக்கான வாய்ப்பு 41 சதவிகிதம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணியே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் யாருக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது என்ற கருத்த்துக்கணிப்புகளும் வெளியாகியுள்ளன. அந்த வகையில் தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் சேலம் லோக்சபா தொகுதியில் திமுகவிற்கு வெற்றிக்கான வாய்ப்பு 41 சதவிகிதம் உள்ளது. அதிமுகவிற்கு 36 சதவிகிதம் வாய்ப்புள்ளது.
பாமகவிற்கு 13 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் லோக்சபா தொகுதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரை உள்ளடக்கியது என்பதால் இயல்பாகவே இந்த தொகுதி அதிக கவனம் பெற்றது. திமுக அதிமுக இந்த தொகுதியில் நேரடியாக மோதுகின்றன.
பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. திமுகவில் செல்வ கணபதியும், அதிமுகவில் விக்னேஷும், பாமகவில் அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சி சார்பாக மனோஜ்குமாரும் களத்தில் உள்ளனர். சேலம் தொகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தாலும் இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுகவிற்கு வெறும் 5 சதவிகிதமே வித்தியாசம் இருக்கும் என தந்தி டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் சேலம் தொகுதியில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவிற்கு 13 சதவிகிதமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே போட்டியில் பாமக மிகவும் பின் தங்கியிருக்கும் என்றே தந்தி டிவியின் கருத்துக்கணிப்புகள் சொல்லும் பாயிண்டாக உள்ளது.
எது எப்படியோ மக்களின் உண்மையான தீர்ப்பு என்னவென்பது இன்னும் இரண்டே நாட்களில் தெரிந்துவிடும். சேலம் தொகுதியில் 1999 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட செல்வகணபதியும், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.வி.தங்கபாலுவும் வென்றுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் செம்மலையும், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வமும் வெற்றி பெற்றனர். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வென்றது. எஸ்.ஆர். பார்த்திபன் வெற்றி பெற்றார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications