ரூ.2.60 லட்சத்திற்கு சில்லறை.. மூட்டை மூட்டையாக கொட்டி பைக் வாங்கிய இளைஞர்.. பின்னணியில் செம காரணம்!
சேலம்: சேலத்தில் இளைஞர் ஒருவர் சில்லறை காசுகளை கொடுத்து விலை உயர்ந்த பைக்கை வாங்கிய சம்பவம் வைரலாகி உள்ளது.
Recommended Video
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் பட்டம் படித்துவிட்டு தற்போது யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
boo tech என்ற பெயரில் இவர் நடத்தி வரும் சேனல் மிகவும் பிரபலம். இந்த நிலையில்தான் 1 ரூபாய் நாணயங்களை கொடுத்து இவர் பைக் வாங்கிய சம்பவம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

சேலம்
தனது யூ டியூப் சேனல் மூலம் வரும் வருமானம் மூலமும், சேமிப்பின் மூலமும் இவர் 2.60 லட்சம் ரூபாய் சேமித்து சேலத்தில் பைக் வாங்கி இருக்கிறார். இவர் பைக் வாங்கியதில் என்ன சிறப்பம்சம் என்றால்.. மொத்தமாக 2.60 லட்சம் ரூபாய்க்கும் இவர் சில்லறை நாணயங்களை கொடுத்து பைக் வாங்கி இருக்கிறார். அதாவது வெறும் 1 ரூபாய் நாணயங்களை 2.60 லட்சம் ரூபாய்க்கும் கொடுத்து இவர் பைக் வாங்கி உள்ளார்.

ஏன் இப்படி?
மக்களிடம் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனது சேனலில் சுவாரசியமான வீடியோவை வெளியிட வேண்டும் என்பதற்காகவும் இவர் இப்படி செய்ததாக தெரிவித்துள்ளார். தான் இப்படி பைக் வாங்கியது பற்றி பூபதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இரண்டு வருடமாக பணம் சேர்த்துக்கொண்டு இருந்தேன். இந்த குறிப்பிட்ட பைக் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

சேமிப்பு
தொடக்கத்தில் சேமித்த போது 10 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறைகள் இருந்தது. மற்ற பணத்திற்கு ரூபாய் நோட்டுகள் இருந்தது. நான் பைக் வாங்க நினைத்த போது அதன் விலை 2 லட்சத்தில் இருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது. யாரிடமும் காசு கேட்க கூடாது என்று நானாக முயன்று இந்த பணத்தை சேமித்தேன். பைக் ஷோரூமில் சில்லறைகளை கொடுத்து வாங்க வேண்டும் என்று யோசித்தேன்.

கோவில்கள்
இதனால் தினமும் பல நூறு கிலோ மீட்டர்கள் சென்று கோவில்களுக்கு போய் சில்லறைகளை பெற்றோம். பணத்தை கொடுத்து பழனி உள்ளிட்ட பெரிய கோவில்களில் இருக்கும் உண்டியல்களில் இருந்து சில்லறைகளை மாற்றிக்கொண்டோம். இதன் மூலம் முழுக்க முழுக்க ஒரு ரூபாய் காயின்களாக மாற்றி பைக் வாங்கி இருக்கிறேன் இப்போது. முதலில் பைக் ஷோரூமில் இதை யாரும் நம்பவில்லை.

நம்பவில்லை
அதன்பின் இது சேமித்த காசுதான். என்னிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று கூறிய பின் பைக் ஷோரூமில் ஏற்றுக்கொண்டனர். என் நண்பர்கள், நான், பைக் ஊழியர்கள் சேர்ந்து பணத்தை எண்ணினோம். மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இருந்தது என்று பூபதி குறிப்பிட்டு உள்ளார். இவர் இப்படி சில்லறைகளை கொடுத்து பைக் வாங்கிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications