பறந்து வந்த ட்ரோன்.. லுங்கி அவிழ்ந்தது தெரியாமல் ஓடும் இளைஞர்கள்.. திருப்பூர் அல்ல, இது சேலம் கூத்து
சேலம்: கேரம் போர்டு விளையாடியவர்களை ட்ரோன் கேமரா மூலமாக திருப்பூர் காவல்துறை விரட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதில் ஒருவர் ஓடும்போது லுங்கி அவிழ்ந்து விட, அதை விட்டுவிட்டு கேரம்போர்டு பலகையைக் கொண்டு உடலை மறைத்துக்கொண்டு அந்த நபர் ஒடுங்கியிருந்த காட்சி பெறும் வைரலாக சுற்றி வந்தது.
Recommended Video
இந்த நிலையில், நாங்கள் மட்டும் கம்மியா என்று சொல்லுமளவுக்கு சேலம் காவல்துறையினரும் ட்ரோன் கேமரா மூலம் கெத்து காட்டி உள்ளனர்.
இந்த சம்பவம், நகர மலை அடிவாரத்தில் நடந்துள்ளது. அங்கு சிலர், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததும், ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.

ஓட்டம்
கேமரா நெருங்கி வந்ததை பார்த்ததும், விளையாடிக் கொண்டிருந்தவர்கள், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி உள்ளனர்.
அதில் ஒருவர் தனது லுங்கியை மடித்துக் கட்டி முகத்தை மறைத்துக் கொண்டு பம்மியபடி செல்கிறார் இன்னும் ஒருவர் மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டு இருக்க அவர் பக்கத்தில் செல்கிறது அவர் தனது கையில் இருந்த பேட்டை வைத்து அதனை நோக்கி ஓங்கி ஓங்கி அடிக்கிறார் ஆனாலும் அப்படியே நின்ற காரணத்தால், அவர் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.

பாறைகள்
இன்னும் சிலர் சில பாறைக்கு அடியே சென்று ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். மரங்களின் இலைகளை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒருவர், தான் அணிந்திருந்த லுங்கியே விழுந்தது கூட தெரியாமல் ஓட்டம் பிடிக்கிறார்.

மடக்கிப்பிடித்த போலீஸ்
இவர்கள் இப்படி தப்பித்து ஓடும் போது அங்கே வந்து காவல்துறை மடக்கிப் பிடிக்கிறது. அவர்களை குத்துக்காலிட்டு உட்காரவைத்து, குதிக்கச் சொல்லி தண்டனை கொடுத்துள்ளது போலீஸ். அதுவும் வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. சிக்கியவர்கள், தவளை போல ஜம்ப் செய்து சென்றனர்.
|
தனித்திரு, விழித்திரு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருந்தால்தான், இந்த பாதிப்பு வராது என்று அரசு எத்தனை முறை எச்சரித்தும், கேரம் போர்டு ஆடுவது, கிரிக்கெட் ஆடுவது என்று கூட்டமாக சேர்ந்து கொண்டு இளைஞர்கள் செய்யக்கூடிய செயல்கள், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications