பிணத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. அதிர வைக்கும் "சைக்கோ கில்லர்".. கதி கலங்கும் சேலம்!!
Recommended Video
சேலம்: சடலத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. பணத்தை எடுப்பதுதான் இந்த சைக்கோ கில்லரின் முக்கிய வேலையே! ரோட்டோரம் தூங்கி கொண்டிருப்பவர்களின் தலையில் கல்லைதூக்கி போட்டு கொன்று வரும் இந்த சைக்கோவை கண்டு சேலம் பகுதி மக்கள் நடுங்கி வருகின்றனர்!
சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வாட்ச்மேன்கள் மர்மமான முறையில் இறந்து வந்தனர்.. இரவு நேரங்களில் டியூட்டிக்கு வரும் வாட்ச்மேன்கள் பொழுதுவிடிந்து பார்த்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பார்கள்.
தினமும் ஒரு கொலை என்று சென்னையை மிரட்டி எடுத்தான் அந்த சைக்கோ கொலையாளி.. சென்னை போலீசுக்கும் இந்த வழக்கு பெரும் சவாலாகவே அன்று இருந்தது!

சைக்கோ
அதுபோலவே சேலத்திலும் இப்போது கொலை விழுகிறது.. சேலம் காசகரனூர் பகுதியில் 2 நாளில் 2 கொலை என பீதி பொதுமக்களை சூழ்ந்துள்ளது.. கொல்லப்படுபவர்கள் எல்லாருமே வயசானவர்கள்தான்.. இவர்கள் யாருமில்லாத ஆதரவற்றவர்கள்.. வீடு வாசல் இல்லாமல் ரோட்டோரம் தூங்குபவர்கள்.. இவர்களைதான் குறிவைத்து சைக்கோ நபர் கொன்று வருகிறான்.

டயர் கடை வாசல்
இது சம்பந்தமான போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.. அதன்படி 3 மணியளவில் ஒருவர் தனியார் டயர் கடை வாசலில் தூங்கி கொண்டிருக்கிறார்.. அப்போது ஒரு மர்ம நபர் அங்கு வருகிறார்.. முதியவரின் தலையில் ஒரு பெரிய கல்லை போட்டு கொலை செய்கிறார்.. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொலைகாரன்
இதற்கு பிறகு இன்னொரு முதியவரும் இதே போல் கொல்லப்படவும், அந்த பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அதே கொலைகாரன்.. அதேபோல் கல்லை தூக்கி.. முதியவரின் தலையில் போட்டு கொல்கிறான்.. அவர் இறந்த பிறகு அவரது சடலத்தை இப்படியும், அப்படியும் புரட்டி போட்டு.. பேன்ட், டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து செல்கிறார். இந்த நபர் யார் என தெரியவில்லை.

தனிப்படை
வயதானவர்களை குறி வைத்து கொலைகள் நடந்து வருவதால், இந்த கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து சேலம் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது சம்பந்தமான சிசிடிவி காட்சியையும் வெளியிட்டுள்ளனர்.. அதில் அந்த இளைஞர் படு கேஷூவலாக காணப்படுகிறார்.. கொலை செய்யும்போதும் சரி, சடலத்தின் பாக்கெட்டில் பணம் எடுக்கும்போதும் சரி.. எந்தவித பயம், பதட்டம், டென்ஷன் இல்லாமல் இருப்பதை பார்த்தாலே நடுங்குகிறது!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications