சேலத்துக்கு ஹேப்பி.. கொங்கு வழியே பாயும் எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ஸ்பெஷல்.. இதுதான் டைமிங்
சேலம்: எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இன்று முதல் துவங்கப்பட்டுள்ள நிலையில், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு இன்று முதல் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.. கோவை ஈரோடு சேலம், வழியாக இந்த வந்தே பாரத் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.

இன்று முதல் சேவை: கொச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகளுக்காக அதிவேக ரயில் சேவை என்றும் சொல்லலாம். 06001 என்ற எண் கொண்ட எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் இன்று ஜூலை 31ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.. சிறப்பு ரயில் என்பதால் ஆகஸ்ட் 25ம் தேதி வரை இந்த அதிரடி அறிவிப்பு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்திற்கு புதிதாக ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வரப்போகும் நிலையில், இந்த அறிவிப்பானது, தமிழக மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.. காரணம், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தொடங்கி தமிழகத்தின் கொங்கு மண்டலம் வழியாக கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரை சென்றடைகிறது. இந்நிலையில், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.. அதில் தெரிவித்துள்ளதாவது:
சிறப்பு ரயில்: "கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் வழியாக எர்ணாகுளம்- பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம்-பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06001) ஜூலை 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 25-ந் தேதி வரை புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 6.33 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையம் சென்றடையும்.
சேலம் ஸ்டேஷன்: இதேபோல் மறு மார்க்கத்தில் பெங்களூரு கண்டோன்மெண்ட்- எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06002) ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வியாழன், சனி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.58 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றடையும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications