சேலத்தில் ஷாக்.. ஜவ்வரிசி ஆலையில் திடீர் வாயுக் கசிவு! 6 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல்! பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் சேகோ ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவில் ஆறு பேர் பாதிப்பு :
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத்துறை வீரர்கள் வாயு கசிவை கட்டுப்படுத்தினர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சதாசிவம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது சேகோ ஆலையில் இன்று, மாலை, 5:30 மணியளவில், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மின் கசிவு ஏற்பட்டதில் அங்கிருந்த சாக்கு பைகள் எரிந்து அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜவ்வரிசி மூட்டைகளும் தீயில் எரிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் வைத்திருந்த 15 மூட்டை குளோரின் பவுடர் மூட்டைகள் மீது தீ பரவியது.

Salem Chlorine Gas Leak

அப்போது அங்கிருந்த பணியாளர்கள் தீயை அணைக்கும் போது குளோரின் பவுடர் மூட்டைகள் மீதும் தண்ணீர் ஊற்றியதால், தீ விபத்தில் ஏற்பட்ட புகையுடன், குளோரின் பவுடரும் சேர்ந்து வாயு கசிவாக மாறியது. புகை மற்றும் வாயு கசிவால் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் ஆறு பேர் மூச்சுத் திணறல் மற்றும் சுவாச பாதிப்பு ஏற்பட்டு மயங்கினர். அவர்களை ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீயணைப்புத் துறை வீரர்கள் வாயுகசிவு ஏற்பட்ட பகுதியில், 3 மணி நேரம் போராடி தீ விபத்து மற்றும் வாய்வு கசிவை கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக, ஆத்தூர் ஆர்.டி.ஓ., தமிழ்மணி தலைமையிலான வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆத்தூர் ஊரக போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

தனியார் சேகோ ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்ட தகவல் வெளியான நிலையில் அங்கு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சென்றனர். தீயணைப்பு துறையின் மீட்பு பணிகள் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த நபர்கள் சிலர் செய்தி எடுக்க விடாமல் தடுத்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் வருவாய் துறையினர். பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த அந்த நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+