இனி கடலூர் ஈஸியா செல்லலாம்.. சேலம் - விருத்தாச்சலம் டெமு ரயில் நீட்டிப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்
சேலம்: சேலம் - விருத்தாச்சலம் இடையே டெமு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சேலம் - விருத்தாச்சலம் இடையே டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை கடலூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் தான் சேலம் - விருத்தாச்சலம் டெமு பயணிகள் ரயில் கடலூர் துறைமுக சந்திப்பு வரையிலான நீட்டிப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சேலத்தில் இருந்து புறப்படும் டெமு ரயில் கடலூர் துறைமுக சந்திப்பு செல்லும். பிறகு அங்கிருந்து சேலம் புறப்பட்டு செல்லும்.
அதன்படி சேலம் -விருத்தாச்சலம் டெமு பயணிகள் ரயில் (வண்டி எண்: 06122) மே மாதம் 2ம் தேதியில் இருந்து கடலூர் துறைமுக சந்திப்பு வரை செல்லும். அதன்படி சேலத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும் டெமு ரயில் இரவு 9 மணிக்கு விருத்தாச்சலம் சந்திப்பு ரயில் நிலையத்தை அடையும்.
பிறகு விருத்தாச்சலத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9. 25 மணிக்கு ஊத்தங்கால் மங்கலம் சென்று இரவு 9.26 மணிக்கு புறப்படும். இந்த ரயில் நெய்வேலியை இரவு 9.33 மணிக்கும், வடலூரை 9.42 மணிக்கும், குறிஞ்சிப்பாடியை 9.50 மணிக்கும் அடையும். அதன்பிறகு கடைசியாக 10.25 மணிக்கு கடலூர் துறைமுக சந்திப்பு ரயில் நிலையத்தை டெமு ரயில் சென்றடையும்.
அதேபோல் மறுமார்க்கமாக விருத்தாச்சலம் - சேலம் டெமு பயணிகள் ரயில் (06121) மே மாதம் 3ம் தேதி முதல் கடலூரில் இருந்து சேலத்துக்கு புறப்படும். அதன்படி கடலூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் ரயில் 5.18 மணிக்கு குறிஞ்சிப்பாடி, 5.26 மணிக்கு வடலூர், 5.35 மணிக்கு நெய்வேலி, 5.43 மணிக்கு ஊத்தங்கால் மங்கலத்தை அடையும்.
அதன்பிறகு 6.05 மணிக்கு விருத்தாச்சலம் வரும் ரயில் 10 நிமிடம் நிறுத்தப்படும். அங்கிருந்து மீண்டும் 6.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.05 மணிக்கு சேலம் சந்திப்பை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெமு ரயில் நீட்டிப்பால் கடலூர் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர். இருப்பினும் கூட இந்த டெமு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் செல்லாது.
இந்த திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் தான் கடலூர் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளளது. மாறாக கடலூர் துறைமுக சந்திப்பு ரயில் நிலையம் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் டெமு ரயிலை கடலூர் துறைமுக சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிப்பு செய்தால் கடலூர் மக்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்பது அங்குள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications