திமுக மாநாட்டு பந்தலில் ஒவ்வொரு இருக்கையிலும் மஞ்சள் பை.. உள்ளே ஸ்நாக்ஸ்.. இத்தனை ஐட்டங்களா?
சேலம்: திமுக இளைஞரணி மாநாட்டில் தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் அடங்கிய மஞ்சள் பைகள் ஒவ்வொரு இருக்கையிலும் வைக்கப்பட்டிருந்தன.
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணி அளவில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பில் தொடங்கியது. திமுக துணைப் பொதுச் செயலாளா் எம்.பி கனிமொழி கட்சி கொடியேற்றி மாநாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநாட்டு பந்தலை மாணவரணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுத் தீா்மானங்கள் முன்மொழிய, அந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உதயநிதி ஸ்டாலின் 25 தீர்மானங்களை முன்மொழிந்தார். தொடர்ந்து, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, 22 தலைப்புகளில் முன்னணித் தலைவா்கள் உரையாற்றி வருகின்றனர். இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.
திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு என, பல்வேறு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு திடலில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் உள்ளே வருவதற்கு 5 வாயில்களும், மேடையில் நடைபெறும் நிகழ்வைப் பார்ப்பதற்காக 120 எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று, மாநாட்டு திடலில் 17 ஆயிரம் மின்விசிறிகள் பொருத்தப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் சுமார் 5 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், உள்ளிட்டவற்றுடன் மதிய விருந்து தயாராகியுள்ளது. மேலும், சைவ விரும்பிகளுக்காக வெஜ் பிரியாணி, கோபி 65 ஆகியவையும் தயாராகியுள்ளன. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் விருந்து தயாரிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
மாநாட்டு திடலில் தொண்டர்களுக்காக போடப்பட்டுள்ள இருக்கைகள் ஒவ்வொன்றிலும் மஞ்சள் பை மற்றும் தண்ணீர் பாட்டில் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மஞ்சள் பையில், பிஸ்கட் பாக்கெட், பிரட் பாக்கெட், மிக்சர், ஃப்ரூட் ஜாம் மற்றும் கேக் ஆகிய தின்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications