13 பயணிகள் ரயில்களுக்கு ஸ்பெஷல் எண் ரத்து.. மீண்டும் பழைய நடைமுறைகள்? சேலம் ரயில்வே கோட்டம் அதிரடி
சேலம்: தமிழகத்தில் 13 பயணிகள் ரயில்கள், மீண்டும் பழைய எண்களிலேயே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
3 வருடங்களுக்கு முன்பு கொரோனா உச்சத்தில் இருந்தபோது, பொதுப் போக்குவரத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.. அதில், பயணிகள் ரயில்கள் அனைத்தும், சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு, சிறப்பு எண்களுடனும், சிறப்பு கட்டணத்துடனும் இயக்கப்பட்டன.

மாற்றங்கள்: இந்த அதிரடி காரணமாக, பயணிகளின் ரயிலுக்கு இருந்த சாதாரண கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.. கடந்த சில மாதங்கள் வரை, சிறப்புக் கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்தான் குறைக்கப்பட்டது. அந்தவகையில், ஏற்கனவே இருந்த பழைய கட்டணமே தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதுபோலவே, சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்களுக்கு, சிறப்பு எண்கள் ரத்து செய்யப்பட்டு, பழைய எண்களிலேயே அந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சிறப்பு எண்கள்: சேலம்- விருத்தாசலம், சேலம்- கரூர், ஈரோடு- மேட்டூர், கோவை- மேட்டுப்பாளையம் உள்பட சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் சிறப்பு எண்களுக்கு மாற்றாக, ஜூலை 1-ம் தேதியில் இருந்து மறுபடியும் பழைய எண்களிலேயே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் உள்ளதாவது:
இதன்படி, ஈரோடு- மேட்டூர் அணை (சிறப்பு எண்.06407) பழைய எண்.56103, மேட்டூர் அணை- ஈரோடு (சி.எண்- 06408) பழைய எண்- 56104, திருச்சி- ஈரோடு (சி.எண்-06809) பழைய எண்- 56105, ஈரோடு- திருச்சி (சி.எண்- 06810) பழைய எண்- 56106, ஜோலார்பேட்டை- ஈரோடு (சி.எண்- 06411) பழைய எண்- 56107, ஈரோடு- ஜோலார்பேட்டை (சி.எண்- 06412) பழைய எண்- 56108, திருச்சி- ஈரோடு (சி.எண்- 06611) பழைய எண்- 56809, ஈரோடு- திருச்சி (சி.எண்- 06612) பழைய எண்- 56810 என நடைமுறைக்கு வரவுள்ளது.
பழைய எண்கள்: இதேபோல், ஈரோடு- ஜோலார்பேட்டை (சி.எண்-06846) பழைய எண்-56812, ஜோலார்பேட்டை- ஈரோடு (சி.எண்-06845) பழைய எண்- 56811, ஈரோடு- கோவை (சி.எண்-06801) பழைய எண்-66601, கோவை- ஈரோடு (சி.எண்-06800) பழைய எண்- 66602, ஈரோடு- பாலக்காடு டவுன் (சி.எண்- 06819) பழைய எண்-66607), பாலக்காடு டவுன்- ஈரோடு (சி.எண்-06818) பழைய எண்-66608 என நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும், கடலூர்- சேலம் (சி.எண்-06121) பழைய எண்- 76813, சேலம்- கடலூர் (சி.எண்-06122) பழைய எண்- 76814, சேலம்- விருத்தாசலம் (சி.எண்- 06896) பழைய எண்- 76816, விருத்தாசலம்- சேலம் (சி.எண்- 06895) பழைய எண்- 76815, சேலம்- கரூர் (சி.எண்-06831) பழைய எண்- 76821, கரூர்- சேலம் (சி.எண்-06836) பழைய எண்- 76822 உள்பட 13 பயணிகள் ரயில்களுக்கு, மீண்டும் பழைய எண்களே வழங்கப்பட்டுள்ளன.
இவை ஜூலை 1-ம் தேதி முதல் பழைய எண்களில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications