நீட் தேர்வ பார்த்து பயப்படாதீங்க! டாக்டர் படிப்பு இல்லை என்றால்.. இயக்குநர் சீனு ராமசாமி அட்வைஸ்
சேலம்: நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்படக் கூடாது என்று டாக்டர் படிப்பு இல்லாவிட்டாலும் மருத்துவத்துறையில் வேறு படிப்புகள் உள்ளதாகவும் மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
Recommended Video
சேலத்தில் பாரதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி கலந்து கொண்டார். இதில் அவருக்கு "மாமனிதன்" என்ற பெயரில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சீனு ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இளம் இயக்குநர்களை எனது சமகால படைப்பாளிகளாக தான் பார்க்கிறேன், அவர்கள் மிகவும் பரபரப்பான ஆக்சன் படங்கள் மற்றும் நுண்ணுணர்வான படங்களையும் இந்த வயதில் துணிந்து எடுப்பதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாமனிதன் திரைப்படம்
அவர்களுக்கு முன்பாக திரையுலகுக்கு வந்தாலும் சமகாலத்தில் பயணிப்பவர்கள் என்ற முறையில் அவர்களுடன் சேர்ந்து நல்ல பாதையில் பயணிக்க விரும்புகிறேன். விக்ரம் திரைப்படம் வெளியான போது அதிக விளம்பரம் இல்லாமல் மாமனிதன் திரைப்படம் வெளியானது. 40% பார்வையாளர்கள் மட்டுமே பார்த்த மாமனிதன் ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

சிறந்த ஆசிய படம்
உலக நாடுகளில் மாமனிதன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் முதல் தொடக்கம் தான் டோக்கியோ நகரில் சிறந்த ஆசிய படமாக மாமனிதன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மாமனிதன் திரைக்கதையை கேட்டு விட்டு நடிக்கிறேன் என்று கூறியதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது.

நீட் தேர்வு
அடுத்து இடிமுழக்கம் என்னும் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகளை ஈடுபட்டு வருகிறோம். அதன்பின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். நீட் தேர்வை கண்டு மாணவ மாணவிகள் பயப்படக்கூடாது. டாக்டர் இல்லை என்றால் மருத்துவத்துறையில் வேறு படிப்புகள் உள்ளன அதனை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்கலாம்.

தற்கொலை எண்ணம்
தற்கொலை எண்ணத்தை அறவே தவிர்க்க வேண்டும். தன்னை வளர்த்த பெற்றோர்களை நிரந்தர சோகத்தில் மாணவர்கள் தள்ளக்கூடாது. கனவு ஈடேறாத போது மாணவர்கள் அது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதற்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது தற்கொலை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது. எனது ஒவ்வொரு படத்திலும் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்ப்பு இருந்து வருகிறது." என்று தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications