ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி போட்டி... சேலத்தில் ஆச்சர்யம்.. சேவையாற்ற பேரார்வம்!
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி கிராம ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 92 வயதான மூதாட்டி கனகவல்லி என்பவர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
மூதாட்டி கனகவல்லி ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முருங்கப்பட்டி கிராம ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.

சேவை குடும்பம்
இதே கிராம ஊராட்சியில் கணவர் அழகேசபூபதி, மகன் பார்த்தசாரதி ஆகியோர் தலா 20 ஆண்டுகள் ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கான அடிப்படை வசதிகள்
ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கனகவல்லி கூறுகையில், தானும், தனது குடும்பத்தினரும், ஊராட்சிமன்ற தலைவராக இருந்தபோது, தங்களுடைய கிராமத்திற்கு தேவையான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்தோம்.

மக்களுக்கு நம்பிக்கை
இதனால் எங்கள் மீது பொதுமக்கள் நல்ல நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேர்தலுக்காக பொதுமக்கள் எங்களை ஒரு ரூபாய் கூட செய்ய விடுவதில்லை என பெருமையாக தெரிவித்தார் அவர்.

மக்களே பணம் கட்டினர்
பொதுமக்களே தங்களுடைய பணத்தை செலவு செய்து எங்களை தேர்தலில் போட்டியிட வைக்கின்றனர் என்றார். மேலும் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று, பொதுமக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய உள்ளதாக கனகவல்லி நம்பிக்கை தெரிவித்தார்.

பாராட்ட வேண்டும்
காசு கொடுத்தால்தான் ஓட்டு என்ற தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்களே ஒருவருக்கு செலவு செய்து தேர்தலில் போட்டியிட வைப்பது, பொதுமக்கள் அந்த மூதாட்டியின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் வைத்துள்ள அதீத நம்பிக்கையையே காட்டுகிறது. தள்ளாத வயதிலும் மக்கள் பணியாற்ற உள்ளாட்சி தேர்தலில் களம் காணும் கனகவல்லியின் முயற்சி பாராட்டுக்குரியதே.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications