10 எம்எல்ஏ இருந்தும்! சொந்த வார்டிலேயே வீழ்ந்த எடப்பாடி! இபிஎஸ் "கோட்டை" சேலத்தை பிடிக்கும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சேலம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காலையில் இருந்து பரபரப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. ஆளுமை திமுக கட்சி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

21 பேரூராட்சிகளில் தற்போது அவரது அனைத்து பேரூராட்சிகளிலும் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் நகராட்சிகளில் 137ல் 127ல் திமுகதான் முன்னிலை வகித்துக்கொண்டு இருக்கிறது.

சேலம்

சேலம்

திமுகவின் வெற்றியில் குறிப்பிடத்தக்கது என்றால் அங்கு கொங்கு மண்டல வெற்றிதான். கொங்கு மண்டலம் முழுக்க இந்த திமுக வசம் ஆகியுள்ளது. மதுரை, கோவை, சேலம், திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் அனைத்திலும் திமுகதான் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. முக்கியமாக கோவையில் 100 வார்டுகளில் 20 வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக ஒன்றில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

சேலம் முழு நிலவரம்

சேலம் முழு நிலவரம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. சேலத்தில் மொத்தம் 60 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இதில் திமுக 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் நெடுஞ்சாலை நகர் வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

சேலம் கோட்டை

சேலம் கோட்டை

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மாவட்டம் சேலம். எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி இங்குதான் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தமிழ்நாட்டில் வென்று ஆட்சியை பிடித்தாலும் சேலத்தில் அதிமுகதான் வென்றது. சேலத்தில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் மாவட்டத்தில் சேலம் வடக்கு தொகுதியில் திமுக வென்றது. இந்த தொகுதி தவிா்த்து, இதர 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி,, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகளில் அதிமுகதான் வென்றது.

திமுக

திமுக

10 எம்எல்ஏக்கள் இருந்தும் சேலத்தை அதிமுக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அதே சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிமுகவிற்கு இது பெருத்த இடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி காரணமாக அதிமுக தோல்வி அடைந்ததாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் இந்த முறை தனித்து நின்றும் கூட சேலத்தில் பாஜகவால் வெற்றி அடைய முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+