"ஒரு லோக்சபா தொகுதி" "வேறுவித முடிவு" திமுகவுக்கு வேல்முருகன் பகிரங்க மிரட்டல்- அரவணைக்கும் அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சேலம்: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு லோக்சபா தொகுதியை ஒதுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மிரட்டல் விடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றது. பண்ருட்டி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேல்முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

TVK Chief Velmurugan threatens DMK on Single Loksabha Seat

திமுகவுடன் முரண்பாடு: திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகள், உள்ளூர் விவகாரங்களில் திமுக அரசை விமர்சிக்கவும் வேல்முருகன் தயங்குவதில்லை. சட்டசபையிலும் கூட திமுக அரசின் குறைபாடுகளை வேல்முருகன் சுட்டிக்காட்டு பேசுவது வழக்கம்.

எந்த வகையில் குறைந்துவிட்டோம்?: இந்த நிலையில் லோக்சபா தேர்தலை முன்வைத்து திமுக தலைமையுடன் பகிரங்கமாக மோத தொடங்கிவிட்டார் வேல்முருகன். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் ஏற்காடு செயற்குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் கூறியதாவது: திமுக தலைமையில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளை விட எந்த விதத்தில் வேல்முருகன் கட்சி- தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறைந்துவிட்டது?

TVK Chief Velmurugan threatens DMK on Single Loksabha Seat

என்ன பெரிய வித்தியாசம்?: அந்த கட்சிகளின் பலத்துக்கும் என் பலத்துக்கும் என்ன பெரிய வித்தியாசத்தை திமுக தலைமை கண்டுபிடித்திருக்கிறது? திமுக தலைமைக்கு இந்த செயற்குழு ஊடாக ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறோம்.

எங்களுக்கு ஏன் ஒரு இடம் இல்லை?: திமுகவுடன் இருக்கிற கூட்டணி கட்சிக்கு இருக்கிற அதே பலத்துடன் நாங்களும் இருக்கிறோம். இப்போ கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு கூட ஒரு இடத்தை தருகிற போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதியை ஏன் திமுக தரக் கூடாது? என்பதுதான் எங்களது கேள்வி.

"வேறுவிதமான" முடிவு: ஒரு தொகுதியை கொடுப்பதும் கொடுக்காமல் மறுப்பதும் பெரிய கட்சி என்ற அடிப்படையில் திமுகவின் விருப்பம். அப்படி கொடுக்கவில்லை என்பது தெரிந்த பிறகு நாங்கள் கூட்டணியில் தொடர்வதா அல்லது 'வேறுவிதமான' முடிவுகளை எடுப்பதா என்பதை எங்கள் கட்சியின் மாநில பொதுக் குழு கூடி முடிவெடுக்கும். ஆனாலும் நாங்கள் இப்போது திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்களுக்கு சீட்டும் நோட்டும் பிரச்சனை இல்லை. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

TVK Chief Velmurugan threatens DMK on Single Loksabha Seat

அதிமுக அணிக்கு தாவலா?: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்கனவே இடம் பெற்றிருந்தது. தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்து அதில் உறுதியாகவும் இருக்கிறது. மேலும் திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் வேல்முருகன் கட்சி அங்கே நீடிக்கவும் முடியாது. பாஜகவை எதிர்க்கக் கூடிய வேல்முருகன் தமது கோரிக்கையை நிராகரித்தால் இயல்பாகவே அதிமுகவுடன் கை கோர்க்கத்தான் முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+