“மக்களின் கனவு என்னனு நான் சொல்லட்டுமா சி.எம் சார்?”.. சேலம் கூட்டத்தில் கேட்ட விஜய்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: முதல்வர் ஸ்டாலினின் "உங்க கனவைச் சொல்லுங்க" திட்டத்தை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய். "மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, தவெகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதுதான் மக்களின் ஒரே கனவு" என சேலம் கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் கிளம்பிய விஜய், சரியாக இன்று 11:30 மணிக்குச் சேலம் விமான நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் இடமான சீலநாயக்கன்பட்டிக்கு அவர் காரில் புறப்பட்டார். விஜய் செல்லும் வழியில் கமலாபுரம் விமான நிலையம் முதல் புளியம்பட்டி வரை 450-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

vijay tvk salem

சேலம் விமான நிலையச் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள், விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் தனது காரிலிருந்து தொண்டர்களை நோக்கிக் கையசைத்தபடி சென்றார். சரியாக 12.25 மணிக்குள்ளாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜய் வந்தடைந்தார்.

வேனில் ஏறி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக அரசையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். விஜய் பேசுகையில், தமிழக அரசின் உங்க கனவைச் சொல்லுங்க திட்டத்தை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

விஜய் பேசுகையில், "நான்கே முக்கால் வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி, "உங்க கனவைச் சொல்லுங்க.. நாங்க அதை நிறைவேற்றித் தருகிறோம்" என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி.. மக்களின் கனவு என்ன என்று உங்களுக்கு தெரியுமா சார்? அதுசரி, அவங்க என்ன நினைக்கிறாங்கனே உங்களுக்கு தெரியாது, அவங்க கனவு எப்படி உங்களுக்குத் தெரியும்?

மக்களின் கனவு என்ன என்று நான் சொல்லட்டுமா சார்? 2019, 2021, 2024 ஆகிய 3 தேர்தல்களில் உங்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்ததற்குக் காரணம் நீங்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வீங்க என்று நம்பித்தான். ஆனால், நீங்கள் கொடுத்ததோ மக்கள் விரோத ஆட்சி.

அந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதுதான் மக்களின் கனவு. மக்களின் ஒரே கனவு தவெகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதுதான். 100 % தூய சக்தி ஆட்சி அமைக்கும். அதில் மக்களின் கனவுகள் அனைத்தும் பூர்த்தியாகும், நிஜம் ஆகும்" எனப் பேசியுள்ளார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+