என் பதவி நிரந்தரமா என்று தெரியாது.. த.வெ.க புஸ்ஸி ஆனந்த் ஒரே போடு!

Subscribe to Oneindia Tamil

சேலம்: அனைவரும் அம்மா, அப்பாவின் கால்களில் மட்டுமே விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும் விழக் கூடாது. பொதுச் செயலாளர் பதவி நிரந்தரமா என்பதை தவெக தலைவர் விஜய் மட்டுமே முடிவு செய்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தவெக முதல் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள தவெகவின் வெற்றி மாநாட்டில் தலைவர் விஜய் உங்களைச் சந்திக்கவுள்ளார். தலைவரின் உத்தரவின்பேரில் தவெகவின் அரசியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.

tvk bussy anand

இந்த பயிலரங்கத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு அழைப்பாளர்கள் நிறைய பேர் வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் நாம் ரசிகர் மன்றங்களாக இருந்தோம். பின்னர் நற்பணி மன்றாக இருந்தோம். அதன் பிறகு, மக்கள் இயக்கமாக மாறினோம். இன்று தமிழக வெற்றிக் கழகமாக, அரசியலுக்கு வந்திருக்கிறோம். தலைவர் விஜயின் கடின உழைப்பால் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தவெக கட்சியின் கொடி பறந்து கொண்டிருக்கிறது.

பல நாட்களாக நான் சொல்ல வேண்டும் என்று விரும்பிய ஒரு விஷயத்தை இந்த பயிலரங்கத்தின் மூலமாக சொல்ல ஆசைப்படுகிறேன். இதைத்தான் இனிவரும் காலங்களில் நாம் பின்தொடர வேண்டும். முதலில், நீங்கள் அனைவரும் அப்பா, அம்மாவின் கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய கால்களிலும், இனிவரும் காலங்களில் நீங்கள் விழக்கூடாது.

கட்சிப் பதவி வரும் போகும். சேலம் மாவட்டத் தலைவரிடம் மிக குறுகிய காலத்தில்தான் இந்த கூட்டத்தை நடத்துவது குறித்து கூறினேன். குறுகிய காலத்திலேயே அனைத்து ஏற்பாடுகளையும் அவர் சிறப்பாகச் செய்துள்ளார். வரும் வழியில் இருந்த வரவேற்பு பேனர் ஒன்றில், நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தவெக தலைவர் எனக்கு பொதுச் செயலாளர் பொறுப்பைத்தான் கொடுத்துள்ளார். அது நிரந்தரமா இல்லையா என்பதையெல்லாம் நமது தலைவர் விஜய்தான் முடிவு செய்வார். நான் கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்திருக்கிறேன். அந்தப் பதவிகள் எல்லாம் 5 வருடங்களுக்கு ஒருமுறை வரும், போகும்.

தலைவர் விஜய்யின் ரசிகர் என்ற பதவி கடைசி காலம் வரை இருக்கும். அந்த ரசிகர் என்ற பதவியின் காரணமாகத்தான் இன்று தலைவர் விஜய் என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார். பொதுச் செயலாளர் என்பது ஒரு முகவரிதான் என்றார். விழுப்புரத்தில் மாநாட்டு ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்த புஸ்ஸி ஆனந்தை காண வந்த கட்சியினர் அவரது காலில் விழும் காட்சிகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அப்பா அம்மாவின் காலில் தவிர வேறு யார் கால்களிலும் விழ வேண்டாம் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+