"சனாதனம்".. வெளிச்சத்தை பார்க்க விடாமல் தடுக்கப்பட்ட வரலாறு.. சமூகநீதி அர்த்தம்?.. திருமாவளவன் பளீச்
சேலத்தில் திருமாவளவன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகிறது
சேலம்: பெரியார் பிறந்த நாள் விழாவில், விசிக தலைவர் திருமாவளவன் சேலம் மாவட்டத்தில் உரையாற்றிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக கொண்டாட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.. அதன்படி நேற்றைய தினம் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது.. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தார்.
அதில், "இந்த அரசு 'பெரியார் அரசு அல்லது சமூகநீதி அரசு' என்பதை ஊருக்கு உலகுக்கு உரத்துச் சொல்லும் புரட்சிகரமான அறிவிப்பாகும். இது சனாதன பழமைவாத சமூகநீதிக்கு எதிரான பிற்போக்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிகரமான நிலைப்பாடாகும்..

பெரியார்
பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, பார்ப்பன வெறுப்பு என்றெல்லாம் அடையாளப்படுத்துவோருக்கிடையில், அவரை சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளமென நிலைப்படுத்துகிற தமிழக அரசின் இந்தப் புரட்சிகர நடவடிக்கைப் போற்றுதலுக்குரியதாகும். பிறப்பின் அடிப்படையில் மனிதருக்கிடையில் உயர்வு தாழ்வைக் கற்பித்து அதனை நிலைப்படுத்திய கோட்பாடு தான் சனாதனம்.

அடையாளம்
அவற்றைப் பரப்பி, அதனால் இன்றுவரை பயன் துய்ப்பவர்கள் பார்ப்பனர்களே என்று அவர்களை அடையாளப்படுத்தியதும் அம்பலப்படுத்தியதும் பெரியார்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த "சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை" என்ற நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதன் சுருக்கம்தான் இவை:

சாதி மறுப்பு
"சாதி சகோதரத்துவத்தை மறுக்கிறது.. எந்த சாதியும் இன்னொரு சாதியில் உள்ளவர்களை அண்ணன்-தம்பியாக உறவு கொண்டாட முடியாத அளவுக்கு சமூகம் கட்டமைப்பு இன்று நிறுவப்பட்டுள்ளது.. சகோதரத்தை முற்றாக மறுக்கிறது.. கருத்து சுதந்திரத்தை மறுக்கிறது.. சகோதரத்துவமும், சுதந்திரமும் இல்லை என்றால், சமத்துவம் இருக்காது.

இயேசு
சமத்துவத்தை மறுக்கிற, சகோதரத்தை மறுக்கிற, சுதந்திரத்தை மறுக்கிற ஒரு கருத்தியலின் பெயர்தான் சனாதனம் என்பது.. கிறிஸ்துவ மதம் துவங்கி 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன.. துவக்கி வைத்தவர் இயேசு.. இஸ்லாம் தோன்றி 1500 ஆண்டுகள் ஆகின்றன.. துவக்கி வைத்தவர் நபிகள் நாயகம்.. இப்படி சொல்ல முடியும்.. ஆனால் இந்துத்துவத்தை தோற்றுவித்தவர் யார்? சொல்ல முடியாது..

சனாதனம்
சனாதனம் என்பதற்கு மாறாதது என்று பொருள்.. இந்த சொல்லாடலே அறிவியலுக்கு மாறானது.. இயல்புக்கு மாறானது.. இந்த சொல்லாடல் என்ன சொல்கிறது என்றால், இங்கே நிறுவப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு யாராலும் மாற்ற முடியாது, மாறாது என்பதுதான் சனாதனம்.. மேல்சாதி மேல்சாதிதான், கீழ்சாதி கீழ்சாதிதான்.. பிராமணன்தான் எல்லாருக்கும் மேலானவன்.. பிராமணனுக்கு மேல் எவனும் இல்லை.. இன்னும் சொல்லபோனால் படைக்கப்பட்ட கடவுளைவிடவும் மேலானவன் பிராமணன்.. இதுதான் சனாதனம்.

வரலாறு
சமூக நீதி என்ற சொல்லுக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.. தலைமுறை தலைமுறையாக வஞ்சிக்கப்பட்டவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் நீதியே சமூக நீதி.. வரலாற்றோடு பார்த்தால்தான் சமூக நீதியின் அடிப்படை புரியும்.. வெளிச்சத்தை பார்க்க விடாமல் தடுக்கப்பட்ட வரலாற்றை அறிந்தால் சமூகநீதி என்பதின் அர்த்தமும் புரியும்" என்றார்.
-
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications