சேலம் வந்து கூட எடப்பாடி பெயரை சொல்லாத விஜய்! காங்கிரசுக்கு மறைமுக தூது.. என்ன கணக்கு போடுறார் விஜய்
சேலம்: கட்சி ஆரம்பித்த அண்ணாவை.. எம்ஜிஆரை மறந்தீங்க .. கட்சியை வளர்ச்சியை ஜெயலலிதாவை மறந்தீங்க.. நீங்க எங்களை அனுபவம் இல்லை என்று சொல்கிறார்களா என்று அதிமுகவை லேசாக தாக்கி விஜய் இன்று எடப்பாடி பழனிசாமி பற்றி பேசாமல் தவிர்த்தார். சேலம் வரை போன விஜய்.. எடப்பாடியை பற்றி பேசாமல் தவிர்த்து இருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத் தலைவராக விஜய் இன்று சேலத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில் பேசிய விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி நேரடியாக எந்த விமர்சனமும் செய்யாமல் தவிர்த்தார். அதிமுகவுடன் அவர் காட்டும் மென்மையான போக்காகவே பார்க்கப்படுகிறது.

அதே சமயம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு அவர் மறைமுகமாகத் தூது விட்டுள்ளார். "மதச்சார்பற்ற தேசியக் கட்சிகள், தங்களின் தற்போதைய நிலையை மறுபரிசீலனை செய்து தமிழகத்தின் நலனுக்காகச் செயல்பட முன்வர வேண்டும்" என்று அவர் பேசியது, காங்கிரஸை தனது கூட்டணியை நோக்கி அழைக்கும் முயற்சியாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எடப்பாடியை விமர்சிக்காமல் தவிர்த்தது மற்றும் காங்கிரஸைக் குறிவைத்தது என விஜய்யின் இந்த "சேலம் வியூகம்" வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுக்கலாம்.
விஜய் பேசியது என்ன?
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகையில், டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று சொல்கிறார் ஸ்டாலின்.. ஸ்டாலின் ஆட்சிதான் அவுட் ஆப் கண்ட்ரோல்.. சட்ட ஒழுங்கில் அவரின் ஆட்சி அவுட் ஆப் கண்ட்ரோல் .. பெண்கள் பாதுகாப்பில் அவுட் ஆப் கண்ட்ரோல்.. இளைஞர் நலனில் அவுட் ஆப் கண்ட்ரோல் என்று இந்த ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல் ஆட்சிதான்.
தைரியம்.. தைரியம்தான் எல்லாவற்றிற்கும் ஒரு அடித்தளம். என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்காங்க. என்னோட தாய்நாடான தமிழ்நாடு தான் என்னோட வீடு. என் வீட்ல 8 கோடி உறுப்பினர்கள் இருக்காங்க.. பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க.. உங்க பணம்தான்.. பணம் வாங்கிகிட்டு காதுல விசில் ஊதி அனுப்புங்க.
ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை... உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன். இந்த விஜய் என்ன தப்பு செய்தான். தன்னை நேசிக்கும் மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். அது தப்பா? மற்ற கட்சிகளுக்கு மட்டும் கூட்டங்கள் நடத்த அனுமதியும் இடமும் கிடைக்கும். ஆனால், நமக்கு மட்டும் கொடுக்க மாட்டார்கள். இதையெல்லாம் யார் செய்வது என உங்களுக்கு தெரியும். அதனால்தான் உங்களிடம் நீதி கேட்கிறேன்,
நான் போட்ட அரசியல் பாம் தாறுமாறாக வெடிக்கிறது.. பல கட்சிகளில் நான் போட்ட கூட்டணி பாம் வெடித்துக்கொண்டு இருக்கிறது .. நான் சொன்னேன்.. ஆட்சியில் பங்கு தருவேன் என்று அந்த பாம் வெடிக்கிறது.. பல கட்சிகளில் அந்த பாம் வெடிக்கிறது.. நான் அப்படி பேசியதால் ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார்.. நான் பேசியதால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் பதற்றத்தில் இருக்கிறார். நாங்க ஆட்சியில் பங்கு கொடுப்போம்.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்..
ஏய் விஜய்..வீட்டை விட்டு வெளியே வா"ன்னு சொல்றவங்களுக்கு... என் வீடு எதுன்னு தெரியுமா? தமிழ்நாடு, தமிழ்நாடும்னு சொல்றாங்களே.. அது மற்றவங்களுக்கு வேண்டுமானால் State ஆக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவைர என் தாய்நாடான தமிழ்நாடுதான் என் வீடு என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்கிறார்கள்; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள்.. என் குடும்பம்.. என் உறவு. என் சொந்தம்.
கிண்டல் கேலி செய்கிறார்களோ?
எதில் நம்மை கிண்டல் கேலி செய்கிறார்களோ அங்கே இருந்துதான் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வரும். எனக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள்.. மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர இவர்களுக்கு வேறு என்ன அனுபவம் இருக்கிறது.. மக்களின் பணத்தை எடுத்ததை தவிர இவர்களின் அனுபவம் என்ன
நான் நல்ல அரசியல் செய்ய வந்திருக்கிறேன். யாரையும் அழிக்க விரும்பவில்லை. யாரையும் அழிக்க நான் வரவில்லை. என்னை மாதிரி சொந்தமாக கட்சி தொடங்கி 1 சதவிகிதம் வாக்கு உங்களால் வாங்க முடியுமா? அதற்கு திராணி இருக்கிறதா? என்னை போல தனியாக கட்சி ஆரம்பித்து.. அரசியல் செய்ய முடியுமா? இரண்டு வருடத்தில் முதன்மை சக்தியாக மாறி இருக்கிறோம்
30 சதவிகிதம் வாக்கு சதவிகித்தோடு இருக்கிறோம். உங்களால் இப்படி செய்ய முடியுமா? கொள்கை அரசியல்தான் எங்கள் அரசியல். உங்களை போல கொள்ளை அரசியல் செய்ய மாட்டேன். மக்களை நேசிக்கும், அரசியல், மக்களை பாதுகாப்பாக அன்பாக நடத்தும் அரசியல்தான் என் அரசியல். அந்த அரசியலை என்னால் கொடுக்க முடியும். செஞ்சு காட்டுறேன் என்று சேலம் கூட்டத்தில் விஜய் பேசி உள்ளார்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications