Vijay Salem Meeting: ஊர்விட்டு ஊர் வந்து அனாதையாகிட்டாங்க.. சேலம் தவெக கூட்டத்தில் பலியான இளைஞர்.. அண்டைவீட்டார் கண்ணீர்
சேலம்: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் (Vijay Salem Meeting) கலந்து கொண்டார். அதில் பங்கேற்ற வட மாநில தொழிலாளி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் மிகவும் நல்லவர். மனைவி மற்றும் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்வார். அவரின் மனைவிக்கு தமிழ் கூட தெரியாது என அண்டை வீட்டார் வேதனை தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் இன்று சேலம் சென்றிருந்தார். அந்தக் கூட்டத்தை காண சென்ற வட மாநில தொழிலாளர் சூரஜ் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மகனை போல பேசுவார்..
இதுகுறித்து சூரஜின் அண்டை வீட்டுக்கார பெண் பிரேமா கூறுகையில், "அவரைப் போல் இன்னொருவரை பார்க்க முடியாது. அவரின் மனைவிக்கு தமிழ் கூட தெரியாது. இருப்பினும் சூரஜ் எங்களிடம் ஒரு மகனை போல பேசுவார். வெளியில் திண்ணை அல்லது வண்டியில் அமர்ந்து கொண்டு எங்களிடம் நன்கு பேசுவார். அவருக்கு எப்படி இது நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை.
அவரை இழந்துவிட்டு அந்தப் பெண் எப்படி தவிக்க போகிறார் என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அந்தப் பெண் அதிகம் பேசாது. எதற்காகவும் எங்களை அழைத்தது கூட இல்லை. இப்போது எப்படி வாழ்க்கையை கொண்டு செல்ல போகிறது என தெரியவில்லை. ஊர் விட்டு ஊர் வந்து இன்றைக்கு அந்தப் பெண் அனாதையாக போகிறது என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது. இதுவே நம் மகளாக, மருமகளாக இருந்தால் நமக்க எவ்வளவு வேதனையாக இருக்கும்.
குடும்பத்தின் மீது அக்கறை..
அந்தளவுக்கு மனம் கனக்கிறது. நாம் எவ்வளவுதான் செய்தாலும் அவரின் வீட்டுக்காரர் போல ஆகுமா. சூரஜ் தன் மனைவியை அவ்வளவு கண்ணும் கருத்தமாக பார்த்துக் கொள்வார். அவரை ஒரு கடைக்கு கூட அனுப்ப மாட்டார். அதை நினைத்து நாங்கள் பெருமைப்படுவோம். அப்படிப்பட்டவர் இன்றைக்கு போய்விட்டார் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் ஏதாவது அந்தப் பெண்ணுக்கு பயனிக்கும் வகையில் செய்யுங்கள்" என்றார்.
மற்றொரு அண்டை வீட்டு பெண் கூறுகையில், "அந்தப் பையன் ரொம்ப நல்ல பையன். இன்று காலை கூட என்னிடம் பேசி சென்றார். தவெக கூட்டத்திற்கு போவதாக சொன்னார். உனக்கே அனுமதி இல்லையே என்று கேட்டபோது, 'எங்கள் முதலாளி சார்பாக டோக்கன் கொடுத்துள்ளனர். போயிட்டு வரேன்' என்றான். காலை 5,000 பணம் வந்துவிட்டது என்று சொன்னார். திங்கள்கிழமை ரேஷன் பொருள் வாங்க வேண்டும் என்றான்.
இப்படி ஒரு பையனை பார்க்க முடியாது..
அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களையும் நன்றாக பார்த்துக் கொள்வான். அந்தப் பெண் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பான். எங்களிடம் அவ்வளவு நன்றாக பழகுவான். இப்போது அவரின் வீட்டை பார்க்கவே தாங்க முடியாத வேதனையளிக்கிறது. எங்களால் இதை நம்ப முடியவில்லை. அவரின் மனைவி குடும்பத்திற்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்" என்றார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications