ரோகிணி எங்களுக்கு திரும்பி வர வேண்டும்.. சேலத்தை கலக்கும் போஸ்டர்கள்!
Recommended Video
சேலம்: ரோகிணிதான் எங்களுக்கு திரும்பவும் கலெக்டராக வரவேண்டும் என்று சேலத்தில் போஸ்டரே அடித்து ஒட்டிவிட்டார்களாம்!
171வது கலெக்டராக பதவியேற்றது முதல் சேலம் மாவட்ட மக்களின் அன்பை பெற்றார் ரோகிணி. "சின்ன வயசு பெண்.. பம்பரம் மாதிரி சுழன்று வேலைபார்க்கிறாரே.. மக்கள் கோரிக்கைகளை உட்கார்ந்து பொறுமையுடன் கவனிக்கிறாரே" என்று பலரால் பேசப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தருவது, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது, பள்ளி மாணவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி கொள்வது என மக்கள் மனதில் எளிதாக நுழைந்தார்.
மறுபக்கம், கேலிகளாகவும், கிண்டல்களாகவும், மீம்ஸ்களாகவும் உலா வந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான் ரோகிணி மாற்றம் என்ற செய்தி வந்தது. என்ன காரணம் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், எப்படியோ இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று மட்டும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்த்த ரோகினி, சென்னை இசைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு சேலம் மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கலெக்டர் ரோகிணியை மாற்றம் செய்யக்கூடாது, அவர்தான் எங்களுக்கு கலெக்டராக வரவேண்டும் என்று அரசின் அறிவிப்பு வந்த அன்றே கோரிக்கை எழ ஆரம்பித்தது. இப்போது போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியே விட்டார்கள். அகில பாரத இந்து மகா சபை சார்பில்தான் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
"தமிழக அரசே! தமிழக அரசே!! நேர்மையாக செயல்பட்ட திறமையான சேலம் மாவட்ட பெண் ஆட்சி தலைவர் ரோஹிணியை பணியிட மாற்றம் செய்ததை கண்டிக்கிறோம். மீணடும் ஆட்சிதலைவராக பணியமர்த்த வேண்டும்" என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications