ஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்
Recommended Video
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை விரைவில் நிறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு விநாடிக்கு 2 லட்சத்து கனஅடிக்கு மேல் வந்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியை மூன்று நாளில் தாண்டியது. படிப்படியாக கடந்த சில நாட்களாக காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைகளில் நீர் இருந்து நீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது.

நீர்வரத்து அதிகரிப்பு
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்துள்து.

அணையின் நீர் இருப்பு
இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் 115.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.88 டி.எம்.சியாகவும், நீர் வெளியேற்றம் (பாசனத்திற்காக) 10 ஆயிரம் கனஅடியாகவும் உள்ளது.

கண்காணித்து வெளியேற்றுங்கள்
இந்நிலையில் மத்திய ஜல்சக்தி (நீர்வளத்துறை) அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கர்நாடகாவில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர் வெளியேற்றமும் குறைந்துள்ளது. இருப்பினும் சராசரியாக 10 முதல் 30மில்லி மீட்டர் மழை பெய்தாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். எனவே விரைவில் அணை முழு கொள்ளவை எட்டும் சூழல் உள்ளதால், அணைக்கு வரும் நீர் வரத்தை கண்காணித்து வெளியேற்ற வேண்டும் என ஜல்சக்தி துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது

வெள்ள அபாயம் உள்ளது
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். 120 அடியை (தற்போது 115 அடி ) நெருங்கிவிட்டதால் போது பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும். எனவே அப்போது வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சம் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications