• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

குட் நியூஸ்.. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை.. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

|

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

120 அடி மொத்த கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 91.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Water level of Mettur Dam increasing as good rain recieved in Karnataka

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. அணையின் நீர் இருப்பு 54.70 டிஎம்சி ஆக இருந்தது.

நேற்று காலை வினாடிக்கு 8,622 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

திமுக முன்வைக்கும் அடுத்த முழக்கம்.. தமிழ் எங்கள் உயிர்.. மு.க.ஸ்டாலின் அணிந்த கலக்கல் டி -ஷர்ட்..!

இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியிலிருந்து 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
The water level of Mettur Dam was 91.78 feet at 8 am today. The dam was receiving water at a rate of 12,894 cubic feet per second.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X