வாக்குவாதம் செய்த அபார்ட்மெண்ட் ஓனர்களுக்கு அடி, உதை... துவைத்தெடுத்த செக்யூரிட்டிகள்.. பரபரப்பு!
நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அபார்ட்மெண்ட்டில் வாக்குவாதம் செய்த குடியிருப்புவாசிகளை செக்ரியூட்டிகள் சரமாரியாக தாக்கும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.நொய்டாவில் சமீபகாலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்களுக்கும் அந்த குடியிருப்பின் செக்ரியூட்டிகளுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
தேவையில்லாமல் தங்களை தாக்குவதாக குடியிருப்புவாசிகள் தந்த புகாரில் சில செக்ரியூட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்ந்த கட்டிடங்கள்
சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக போதிய இடவசதியின்றி அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்துவிட்டன. பொதுமக்களும் தனி வீடு வாங்குவதால் ஏற்படும் சில சிரமங்களை மனதில் கொண்டு, இந்த அபார்ட்மெண்ட்டுகளில் ஐக்கியம் ஆகிவிடுகின்றனர். முதலில் 2 மாடிகளில் தொடங்கிய கட்டிடங்கள் தற்போது 100 மாடி வரை பெரிய அபார்ட்மெண்ட்டுகள் கட்டப்பட்டு தீப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டது போன்ற வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

குற்றங்களும் அதிகம்
இதற்கிடையே பெரும்பாலான வீடுகளில் தனியே வசிப்பவர்களை குறிவைக்கும் குற்றவாளிகள் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என குற்றச் செயல்களில் ஈடுபடுவதால், பொதுமக்கள் இதுபோன்ற கட்டிடங்களில் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த குற்றங்களை கட்டுப்படுத்தவும், குடியிருப்பு வாசிகள் நிம்மதியாக வசிப்பதையும் உறுதி செய்வதற்காகத்தான் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதற்காக பிரத்யேக செக்யூரிட்டி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் செக்யூரிட்டி கார்டுகள் நியமிக்கப்படுகின்றனர்.

தீவிர தணிக்கை
மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அடுக்குமாடி குடியிருப்புக்கு வரும், டெலிவரி பாய்கள், கொரியர், தபால், உணவு விநியோகம் செய்பவர்கள், உறவினர்கள் என யார் வந்தாலும அவர்களுடைய தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவிடப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்படுகின்றனர். சில இடங்களில் வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால்தான் கட்டிடத்திற்குள் நுழையும் வகையிலும் செக்ரியூட்டி சிஸ்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பாதுகாவலர்களால்தான் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நிம்மதியாக உறங்குகின்றனர்.

வாக்குவாதம் கூடாது
அதே சமயம் யாராக இருந்தாலும் ஏன் வீட்டின் உரிமையாளராக இருந்தாலும் செக்ரியூட்டிகளின் சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காமல் போவதால் நிறைய இடங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சோதனைக்கு குடியிருப்புவாசிகள் ஒத்துழைக்காமல் வாக்குவாதம் செய்ததால் அவர்களை செக்யுரிக்கல் தாக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

குடிபோதை இளைஞர்கள்
இரவு நேரத்தில் போதையில் வரும் சிலர் செக்ரியூட்டியின் சோதனைக்கு ஒத்துழைக்காமல் அவர்களிடம் வாக்குவாதம் செய்து உளளனர். இதை அடுத்து பிரச்சனை பெரிதாக வேறு வழியின்றி குடியிருப்புவாசிகள் சரமாரியாக தாக்கப்பட்டுளள்னர். குடியிருப்புவாசிகள் மிக மோசமாக தாக்கப்பட் நிலையில் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே குடியிருப்புவாசிகள் நமக்காக நியமிக்கப்பட்டுள்ள செக்ரியூட்டி கார்டுகள் நாமும் நம்முடைய குடும்பமும் நிம்மதியாக இருப்பதற்காகத்தான் அவர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications