சிங்கப்பூரில் கொரோனா உக்கிரம்- ஒரே நாளில் 386 பேருக்கு பாதிப்பு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,918
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. ஒரேநாளில் 386 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் உக்கிரம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 386 பேருக்கு கொரோனாவின் பாதிப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிகை 9 ஆனது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,918 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட பிற நாட்டினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவித்திருந்தன. சிங்கப்பூரில் வெளிநாட்டிவர் அதிகம் தங்கும் இடங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.
சிங்கப்பூரில் கொரோனா பரவுவதைத் தடுக்க ஏற்கனவே லாக்டவுன் அமலாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications