இந்தியாவின் மிக முக்கியமான மூவ்.. சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்.. ஒரே கல்லில் பல மாங்காய்
சிங்கப்பூர்: இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியக் கடற்படைக்குக் கப்பல்கள் இப்போது சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுள்ளது. இந்தக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் திடீரென அங்குச் செல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உலகிலேயே மிகவும் வலிமையான கடற்படைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. சமீப காலங்களாகத் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியக் கடற்படைக்குக் கப்பல்கள் இப்போது சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுள்ளது.

இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் 'தீர்', 'ஷார்தூல்', 'சுஜாதா' ஆகிய கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல் படையின் 'சாரதி' கப்பலும் இப்போது சிங்கப்பூர் துறைமுகத்திற்கு விரைந்துள்ளன. அங்கு அவை பல்வேறு பயிற்சி, தொழில்சார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றன. இந்தக் கப்பல்கள் கடந்த ஜனவரி 15ம் தேதி சிங்கப்பூர் சென்றடைந்தன. தென்கிழக்கு ஆசியாவிற்கான தொலைதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாகக் கடந்த 3 நாட்களாக அந்தக் கப்பல்கள் அங்கேயே இருந்தன.
தெற்காசிய நாடுகளுக்கு வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ட் ஈஸ்ட் பாலிசி கீழ் இந்தியா- சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையாக இருக்கும்.
110வது ஒருங்கிணைந்த அதிகாரிகள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்தப் பயணம், இந்தியா - தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. இன்றைய தினம் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் இந்தக் கப்பல்கள் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தின் துறைமுகங்களுக்குச் சென்று, அங்கும் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், "அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் கடல்சார் ஈடுபாட்டை வலுப்படுத்துவதும் இதன் பிரதான நோக்கமாகும். சுதந்திரமான, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையே இது காட்டுகிறது" என்றனர்.
இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் நட்பு நாடுகளின் பயிற்சி மாணவர்களுக்குக் கப்பல் ஓட்டுதல், போர்க் கப்பல் கையாளுதல் மற்றும் கடல்சார் செயல்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவங்கள் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் மாலத்தீவுகள், மியான்மர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆறு சர்வதேச அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications