சிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியருக்கு 14 வாரம் சிறை!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியர் தேவராஜ் தமிழ் செல்வனுக்கு 14 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் தேவராஜ் தமிழ் செல்வன். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தனது காதலியை தாக்கினார்.

இதனை தொடர்ந்து புகாரின்பேரில் தேவராஜ் தமிழ் செல்வனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் வைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது தனக்கு மூச்சுவிட சிரமம் இருப்பதாக அவர் போலீசாரிடம் கூறினார்.
இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தேவராஜ் தமிழ் செல்வன் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றினார். போலீசார் மற்றும் மருத்துவர்கள் மாஸ்க் அணிய வலியுறுத்தியபோதும், மாஸ்க் அணிய மறுத்த தேவராஜ் தமிழ் செல்வன், ஒரு போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இரும்பினார். மேலும், போலீசாரையும், மருத்துவ பணியாளர்களையும் தகாத வார்த்தையால் திட்டினார்.
இது தொடர்பாக தேவராஜ் தமிழ் செல்வன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங் தியாம், தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications