சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பெற்றோர்களுக்கு இலவச பயிலரங்கு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் பெற்றோர்களுக்கான இலவச பயிலரங்கை நடத்தியது.
சிண்டாவின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் பகல் 12.30 மணி வரை "NURTURING PARENTS, BRIDGING TEENS" என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான இலவச பயிலரங்கை இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடத்தியது.

பெற்றோர்கள் மற்றும் இளையர்களுக்கான பயிலரங்குகள் நடத்துவதிலும் சமூக சேவையிலும் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களாகிய திருமதி ஜகஜித் கார் மற்றும் திரு மணிவண்ணன் இருவரும் இணைந்து இப்பயிலரங்கை நடத்தினர். பெற்றோர்களுக்கான சிறந்த ஆலோசனைகளும் இளையவர்களை புரிந்துகொண்டு இணக்கமான நல்லுறவை மேம்படுத்தும் வழிகளையும் எடுத்துரைத்தனர்.

கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது. சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரா. அன்பரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வழங்கிய வாழ்த்துரையில் "பிள்ளைகளின் ஆர்வத்தையும் திறமைகளையும் கண்டறிந்து பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர் வரவேற்புரை வழங்கினார். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா நன்றியுரை கூறினார். சங்கத்தின் உறுப்பினர்களும் பொதுமக்களும் இப்பயிலரங்கில் கலந்துகொண்டன

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications