சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ஜாக்கெட்டையே உற்று பார்த்த பிரிட்டன் பணக்காரர்.. 2 வருடம் கழித்து ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் புகழ்பெற்ற சாங்கி விமான நிலையத்தில் உள்ள "ஜுவல்" வணிக வளாகப் பகுதியில் ஒரு ஜவுளிக்கடை அமைந்துள்ளது.. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஒரு திருட்டுச் சம்பவம் நடைபெற்றது... இப்போது இந்த திருட்டு சம்பவம் பரபரப்பாக பேசப்பட என்ன காரணம் தெரியும்? அவ்வளவு பெரிய ஜவுளிக்கடையில் அப்படியென்ன பொருள் திருடு போனது? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

உலக அளவில் பயணிகள் வந்து செல்லும் மிக முக்கிய வான்வழிப் போக்குவரத்து மையமாக விளங்குவது சாங்கி.. இந்த ஏர்போர்ட்டிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

Singapore Airport Jacket

சிங்கப்பூர் ஏர்போர்ட் சம்பவம்

இந்த ஏர்போர்ட்டை ஒட்டி "ஜுவல்" ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இந்த மாலில்தான் அந்த புகழ்பெற்ற ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது.. எனவே, இங்கு எப்போதுமே கஸ்டமர்கள் வந்துசென்றபடி இருப்பார்கள்., மற்ற ஜவுளிக்கடை வாசல்களில் வைத்திருப்பது போலவே, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அலங்கார பொம்மைகள் இந்த கடைக்கு வெளியேயும் வைத்திருந்தார்கள்..

அதில் ஒரு பொம்மைக்கு ஆண்கள் அணியக்கூடிய நீல நிற டெனிம் ஜாக்கெட் ஒன்று அணிவிக்கப்பட்டிருந்தது. அந்த பொம்மைக்கு , நீல நிலத்தில் அந்த ஜாக்கெட் பார்ப்பதற்கே அழகாக இருந்தது.. அந்த வழியாக செல்வோரை அந்த பொம்மையின் ஆடை அழகு சுண்டியிழுத்து விடுமாம். அப்படித்தான், அந்த வழியாக சென்றவர் கண்ணில் இந்த பொம்மையின் ப்ளூ கலர் ஜாக்கெட் பட்டுள்ளது.. உடனே அந்த ஜாக்கெட்டை அவர் யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றுள்ளார்.

பொம்மை மீதுள்ள ஜாக்கெட்

பொம்மையை சிறிது நேரம் பார்த்துகொண்டிருந்தாராம்.. பிறகு அது அணிந்திருந்த அந்த ஜாக்கெட்டை உரிய விலைக்குரிய பணம்கூட செலுத்தாமல், அவர் பாட்டுக்கு எடுத்து சென்று விட்டாராம்..

சுமார் 350 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள, அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 22,000 ரூபாய் மதிப்புடைய அந்த ஜாக்கெட் திடீரென காணாமல் போனது, ஜவுளிக்கடை ஓனருக்கு அதிர்ச்சியை தந்தது.. உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைத் ஆய்வு செய்த காவல்துறையினர், இந்தத் திருட்டில் ஈடுபட்டது பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நபர் என்பதை அடையாளம் கண்டு உறுதி செய்தனர். ஆனால், போலீசார் அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்குள், அவர் ஃபிளைட்டில் ஏறி சிங்கப்பூரை விட்டு வெளிநாட்டிற்கே தப்பி ஓடிவிட்டாராம்.. இதனால் அவரை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறியது.. இந்த வழக்கும் தற்காலிகமாக தடைபட்டது.

அதே ஏர்போர்ட், அதே போலீஸ்

இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி அதே சாங்கி விமான நிலையத்தில் இன்னொரு ஃபிளைட் மாறுவதற்காக பிரிட்டன் இளைஞர் காத்திருந்தாராம்.. காவல்துறையினர் தற்செயலாக அவரை பார்த்து ஸ்பாட்டிலேயே கைது செய்துள்ளனர்.. விசாரணையும் மேற்கொண்டனர்.

அந்த இளைஞருக்கு 26 வயதாகிறதாம்.. சர்வதேச அளவில் விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்குப் பணவசதியும், பொருளாதார செல்வாக்கும் படைத்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவ்வளவு நல்ல வசதி இருந்தும் அவர் எதுக்காக ஒரு கடையின் வெளியே தொங்க விடப்பட்டிருந்த பொம்மை ஜாக்கெட்டைத் திருட வேண்டும் என்று தெரியவில்லை..

பணக்கார பிரிட்டன் இளைஞர்

விசாரணைக்கு பிறகு கடந்த ஆகஸ்டு 25ம் தேதி அவர் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் கடுமையான சட்ட விதிகளின்படி, இதுபோன்று கட்டிடத்திற்குள் செய்யப்படும் திருட்டுக் குற்றங்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்..

பொம்மை ஜாக்கெட்டை திருடி, அதே ஏர்போர்ட்டில் 2 வருடம் சிக்கி, இப்போது நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளார் அந்த பணக்கார வீட்டு பிரிட்டன் இளைஞர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+