இஙகிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த மாணவிக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு
சிங்கப்பூரில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் B-117 பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்: பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியது என்று கூறுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வேறு ஒரு வடிவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாற்றமடைந்த வைரசை விட இது வீரியமானது என்றும் வேகமாக பரவக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் உருமாறியுள்ள கொரோனா தொற்று அங்கிருந்து பிரிட்டன் வந்தவர்களுக்கு பாதித்து இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 17வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனினும் அது சமூக பரவலாக பரவ வாய்ப்பு இல்லை என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications