சிங்கப்பூரில் விக்னேஷ்வரன் செஞ்சதை பாருங்க.. இந்தியர்கள் உஷாரா இருக்கனும்! வார்னிங் கொடுத்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விக்னேஷ்வரன் செய்த விஷயம், ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு பாடமாக மாறியிருக்கிறது. வேலைக்காக சிங்கப்பூர் செல்லும் இந்தியர்கள் இனி உஷாராக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு தளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் வளரும் நாடுகளிலிருந்து பலர் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். சிங்கப்பூரின் கரன்சி, உலகின் சக்தி வாய்ந்த கரன்சிகளில் ஒன்றாக இருப்பதால், இங்கு வேலை செய்வதும் லாபகரமானதாக இருக்கிறது.

Singapore

இந்தியரால் ஏற்பட்ட அவமானம்

ஆனால், இங்கு வேலை செய்யும் இந்தியர்கள் சமீப காலமாக வித்தியாசமான குற்ற வழக்குகளில் சிக்கியிருக்கின்றனர். இதனால், மொத்த இந்தியர்கள் மீதான பார்வையும் சிங்கப்பூர் மக்களுக்கு மாறியிருக்கிறது. இதற்கு சமீபத்தில் விக்னேஷ்வரன் செய்த சம்பவமும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் சிங்கப்பூரில் மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்.

விளையாட்டு சத்தம்

இவர் வசிக்கும் குடியிருப்பில், வீட்டின் அக்கம் பக்கம் வீடுகளில் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இந்த வீடுகளை சேர்ந்த குழந்தைகள் எப்போதும் சத்தம் போட்டு விளையாடியிருக்கிறார்கள். பலமுறை இது குறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு விக்னேஷ்வரன் எச்சரித்துள்ளார். ஆனால், மீண்டும் குழந்தைகளின் விளையாட்டு சத்தம் அவருக்கு தொந்தரவாக தெரிந்திருக்கிறது.

பழிவாங்களில் ஈடுபட்ட இந்தியர்

கடந்த தீபாவளியன்று தனது வீட்டில் உறவினர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால், குழந்தைகளின் விளையாட்டு கூச்சல் காரணமாக விருந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, டென்ஷனான விக்னேஷ்வரன், குழந்தைகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் பழிவாங்க திட்டம் தீட்டியிருக்கிறார்.

போலீசாருக்கு மிரட்டல்

அதன்படி, பன்றி இறைச்சியை பொது நடைபாதையில் கொட்டியிருக்கிறார். மட்டுமல்லாது, காவல்துறைக்கு போன் செய்து, பன்றி இறைச்சியை இஸ்லாமிய மக்கள் வசிக்கும் குடியிருப்பின் பொது நடைபாதையில் கொட்டப்போகிறேன். உரிய நேரத்திற்கு வந்து தடுக்காவிட்டால், உங்களையும் தாக்குவேன் என்று உளறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்திருக்கிறார்கள்.

இந்தியர் கைது

விக்னேஷ்வரன் சொன்னது உண்மைதான். அவர் சொன்னபடியே பன்றி இறைச்சியை பொது நடைபாதையில் கொட்டியிருக்கிறார். இஸ்லாமியர்களுக்கு பன்றி இறைச்சி என்பது ஹராம். அதாவது தடை செய்யப்பட்ட உணவாகும். அதை இஸ்லாமியர்கள் சாப்பிட மாட்டார்கள். எனவே போலீசார் விக்னேஷ்வரனை கைது செய்திருக்கிறார்.

மத நல்லிணக்கம்

அவர் மீது மத நல்லிணக்க சட்டம் மற்றும், அரசு ஊழியரை அவதூறாக பேசியது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நீதிபதி முன்னர் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த குற்றத்திற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில்,

"சிங்கப்பூர் உலகின் மிகப்பெரிய மதப் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு நெருக்கமாக வாழும்போது மக்கள் சகிப்புத்தன்மையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும். விக்னேஷ்வரன் மிகவும் முதிர்ச்சியற்ற தன்மையுடன் நடந்துக்கொண்டிருக்கிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தனது குற்றத்திற்கு விக்னேஷ்வரன் மன்னிப்பு கோரினார். இருப்பினும், அவர் மத உணர்வுகளை புண்படுத்தியதால், அவருக்கு 14 வாரங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே சிங்கப்பூர் செல்லும் இந்தியர்கள் இனியாவது உஷாராக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+