சிங்கப்பூர் அதிபராகும் தர்மன் சண்முகரத்தினத்தின் மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி யார் தெரியுமா?
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரம் அந்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் வென்று வாக்கெடுப்பில், சிங்கப்பூரின் அதிபராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தர்மன் சண்முகரத்தினத்தின் மனைவி ஜேன் யூமிகோ இட்டோகி யார் என்பது குறித்து பார்ப்போம்.
சிங்கப்பூரின் அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக தேர்தல் சிங்கப்பூரில் அண்மையில் நடந்தது . இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (GIC) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கொக் சொங் (76), NTUC இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான் கின் லியான் (75) ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 16 சதவீத வாக்குகளும், டான் கின் லியான் 14 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ளார.
இந்நிலையில் சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினம் குறித்தும் அவரது மனைவி குறித்தும் பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள். குறிப்பாக தர்மன் சண்முகரத்தினத்தின் மனைவி குறித்து பலரும் தேடுகிறார்கள்.
ஜேன் யுமிகோ இட்டோகியை தர்மன் சண்முகரத்தினம் 33 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஜூலை 25ம் தேதி சண்முகரத்தினம் தனது ஃபேஸ்புக்கின் முகப்பு படத்தை மாற்றியதுடன் தனது மனைவி இட்டோகியுடன் உள்ள புகைப்படத்தை வைத்தார். அந்தபடத்துடன் இட்டோகியை எங்கு முதல் முதலில் சந்தித்தார என்பதை விவரித்து இருந்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் அவர்கள் இருவரும் முதல் முதலாக சந்தித்துள்ளனர். அவர்களின் முதல் சந்திப்பு குறித்து சண்முகரத்தினம் நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.
ஜேன் யுமிகோ இட்டோகியை சிங்கப்பூர் அதிபரின் மனைவி என்பதை விட அவரை பற்றி சொல்ல அதிகமான விஷயங்கள் இருக்கின்றன . இட்டோகி சிங்கப்பூரில் தனி வரலாறே படைத்துள்ளார். சட்டம் பிடித்தவரான இட்டோகி , கலை மற்றும் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சிங்கப்பூரில் ஏற்படுத்தி உள்ளார்.
சிங்கப்பூரின் பல்வேறு வாரியங்கள் மற்றும் அமைப்புகளில் இட்டோகியின் பங்களிப்பு அளப்பறியது. சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம், தேசிய பாரம்பரிய வாரியம், சிங்கப்பூர் தேசிய கேலரி மற்றும் லாசலே கலைக் கல்லூரி ஆகியவற்றில் இட்டோகி பணியாற்றி உள்ளார்.
தற்போது, இட்டோகி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்ள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி மற்றும் சமூக ஆதரவை வழங்குவதற்காக அரசு சாரா நிறுவனமான டாஸ்க் ஜுரங்க் லிமிடெட் (Tasek Jurong Limited) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் தலைவராவும் பொறுப்பு வகிக்கிறார். இந்த தொண்டு நிறுவனம் மூலம் சிங்கப்பூரின் முன்னாள் கைதிகள், ஆபத்தில் உள்ள இளைஞர்கள், ஒற்றைப் பெற்றோர் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள் மற்றும் ஊனமுற்ற நபர்கள் ஆகியோருக்கு உதவிகளை செய்து வருகிறார்.
ஜேன் யுமிகோ இட்டோகியின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பார்ப்போம். ஜேன் யுமிகோ இட்டோகி அப்பா ஜப்பானியர். அம்மா சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த சீனவம்சாவளி பெண் ஆவார். அதாவது ஜப்பானிய தந்தைக்கும், சீன தாய்க்கும் பிறந்த நான்கு குழந்தைகளில் ஒருவர் தான் இட்டோகி . இட்டோகி தனது மூன்று வயதிலிருந்தே சிங்கப்பூரைத்தான் தனது வீடு என்று அழைத்திருக்கிறார். தியோச்யூ பேசும் கம்போங்கில் வளர்ந்திருக்கிறார்.
இட்டோகி 1988 இல் ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் மறுசீரமைப்பு மற்றும் திவால்நிலை உஆவணக் கடன், வங்கிச் சிக்கல்கள், பங்குகள் மற்றும் பொருட்கள் வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள் மற்றும் பத்திரங்கள் ஒழுங்குமுறை உள்பட பல்வேறு விஷயங்களில் சட்டநிபுணத்துவம் உள்ளவர்.
சட்டத்துறையில் மிகப்பெரிய வழக்கறிஞராக திகழ்ந்த இட்டோகி பின்னாளில் அப்படியே வழக்கறிஞர் பணிகளை விட்டுவிட்டு சிங்கப்பூரின் கலைத்துறையில் ஒரு முக்கிய நபராக மாறினார். இட்டோகி பல புகழ்பெற்ற கலை நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார், சிங்கப்பூரின் கலாச்சாரத்தை பறைசாற்றும் பல முக்கிய விஷயங்களில் இட்டோகின் பங்களிப்பு இருக்கிறது. வெறும் அதிபரின் மனைவி என்று இல்லாமல் சிங்கப்பூரில் பல வரலாறுகளை படைத்துள்ளவர் தான் ஜேன் யுமிகோ இட்டோகி.












Click it and Unblock the Notifications