Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூர் தேர்தல்: பிஏபி மீண்டும் அமோக வெற்றி- பிரதமர் லாரன்ஸ் வோங்க்கு மோடி, ஸ்டாலின் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மீண்டும் மக்கள் செயல் கட்சி (PAP பிஏபி) 65.57% வாக்குகளுடன் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் மே 3-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 97 இடங்களில் மக்கள் செயல் கட்சி 87 தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. கடந்த தேர்தலைப் போலவே பாட்டாளிகள் கட்சி, 10 இடங்களில் வென்றது.

singapore parliament election

இந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் விரைவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைவர் ஸ்பென்சர் இங் கூறுகையில், எதிர்க்கட்சிகளிடம் போதுமான ஒற்றுமை இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் தர்மன், ஒவ்வொரு வாக்காளரும் யாருக்காக வாக்களித்திருந்தாலும் சிறந்த வருங்காலம் வேண்டும் என்பதில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். பிற நாடுகளைப் போல அரசியலில் நம்பிக்கை இழப்பு, பிளவுவாத நிலை எதுவும் இல்லை. இதே நிலைமை வெகுகாலம் நீடிக்க வேண்டும். இந்தப் பொதுத் தேர்தலில் முழு முயற்சியுடன் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை அங்கு மக்கள் செயல்கட்சிதான் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே வெற்றியைப் பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலிலும் மக்கள் செயல் கட்சி பிரம்மாண்ட வெற்றியை அறுவடை செய்துள்ளது.

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வென்ற பிரதமர் லாரன்ஸ் வோங்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோயோவும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் அண்டை நாடான மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக லாரன்ஸ் வோங்குக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் செழிப்பும் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்றும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+