டாப் ஸ்பீடில் சென்னை.. சிங்கப்பூரிலிருந்து வரும் மாற்றம்! இதை யாரும் எதிர்பார்க்கலையே!
சிங்கப்பூர்: மொத்த உலகமும் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில் சென்னையில் அதிநவீன டேட்டா சென்டர்களை அமைக்க ஏதுவாக சிங்கப்பூர், இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன.
துபாயைச் சேர்ந்த du நிறுவனம் இந்த பயணியை செய்ய திட்டமிட்டிருக்கிறது. சைப்ரஸைச் சேர்ந்த Datawave Networks நிறுவனத்துடன் இணைந்து, இந்த அதிநவீன கேபிள் அமைப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறக்க du ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும்.

இந்த கடல்சார் ஃபைபர் ஆப்டிக் வலையமைப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (கல்பா), ஓமன் (மஸ்கட்), இந்தியா (மும்பை, சென்னை), மலேசியா (கெடா), மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆறு முக்கிய இடங்களை இணைக்கும். உலகளாவிய தரவுப் போக்குவரத்திற்கான மாற்று வழிகளை உருவாக்கி, செங்கடல் வழித்தடத்தைச் சார்ந்திருப்பதை குறைப்பதே இத்திட்டத்தின் இலக்கு. 16 ஃபைபர் ஜோடிகள் கொண்ட இக்கம்பி வடம், ஒவ்வொரு ஜோடிக்கும் குறைந்தது வினாடிக்கு 18 டெராபிட்ஸ் தரவு பரிமாற்றத் திறனுடன் செயல்படும்.
இது செயற்கை நுண்ணறிவு, கிளவுட் சேவைகள் மற்றும் ஆசியா, வளைகுடாப் பகுதிகளிலுள்ள மாபெரும் தரவு மையங்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஆதரவளிக்கும். தரவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான உலகளாவிய மையமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை இத்திட்டம் வலுப்படுத்துகிறது என 'டூ' நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் செங்கடல் பகுதியில் பல நீர்மூழ்கிக் கம்பி வடங்கள் சேதமடைந்ததால் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுதி அரேபியாவின் ஜெட்டா அருகே முக்கிய கம்பி வடங்கள் துண்டிக்கப்பட்டு ஆசியா, மேற்கு ஆசியா, இந்தியா முழுவதும் இணையத் தடங்கல்கள் ஏற்பட்டன.
கடந்த மார்ச் மற்றும் 2024ம் ஆண்டு பிப்ரவரியிலும் இதேபோன்ற சம்பவங்கள் இந்திய இணையப் பயனர்கள் மற்றும் வணிகச் சேவைகளைப் பாதித்தன. செங்கடல் வழித்தடத்தைத் தவிர்த்துச் செல்லும் SING கம்பி வடம், இத்தகைய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
இது இந்திய நிறுவனங்களுக்கும், கிளவுட் சேவை வழங்குநர்களுக்கும் தென்கிழக்கு ஆசிய மற்றும் வளைகுடா சந்தைகளுக்கு, குறைந்த புவிசார் அரசியல் அபாயங்களுடன், பாதுகாப்பான இணைப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications