குழந்தை பெத்துகங்க போதும்.. ரூ.46 லட்சம், கூடவே அரசு வீடு தரோம்.. அரசு அறிவித்த வினோத திட்டம்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: உலகின் முக்கிய பொருளாதார மையங்களில் ஒன்றான சிங்கப்பூரில் வரலாறு காணாத வகையில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதே சூழல் தொடர்ந்தால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்பதால் சிங்கப்பூர் அரசு இப்போது அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி குழந்தை பெற்று கொள்ளும் தம்பதிகளுக்கு சுமார் 46 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

இப்போது கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை மக்கள் தொகை சரிவு தான். சிங்கப்பூரும் இதில் தப்பவில்லை. அங்கு பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு 0.87 ஆக குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூர் அரசு திட்டத்தை அறிவித்துள்ளது.

Singapore child birth world offbeat

சிங்கப்பூர் உதவி தொகை

அதன்படி சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை நேரடி உதவியாக சுமார் S$70,000 (சுமார் ரூ.46 லட்சம்) வழங்கப்பட உள்ளது. அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த புதிய திட்டங்களை அறிவித்தார். குழந்தைகளுக்கான நிதியுதவி, வீட்டு வசதி ஆதரவு, குழந்தை பராமரிப்பு மானியம், பெற்றோர் விடுப்பு மற்றும் S$10,000 (சுமார் ரூ.6.5 லட்சம்) மதிப்பிலான குழந்தை பரிசு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த நிதியாண்டில் மட்டும் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் அரசு கிட்டத்தட்ட S$7 பில்லியன் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய திட்டத்தின்படி, சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் S$2,000 குழந்தை கடன் வழங்கப்படும். குடும்பங்களுக்கு S$5,000 மதிப்பிலான மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் S$10,000 குழந்தை பரிசுடன் சேர்த்து, குழந்தைக்கு 17 வயது வரை வழங்கப்படும் நேரடி உதவியின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட S$70,000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 லட்சமாகும்.

கூடுதல் உதவி தொகை

குழந்தை பராமரிப்பு மானியங்களும் பெற்றோர் விடுப்பும் விரிவுபடுத்தப்பட உள்ளன. மேலும், சிங்கப்பூரை பொறுத்தவரை அரசு வீடுகள் ரொம்பவே விலை குறைவானது. இதனால் அங்கு அரசு வீடு கோரி பலரும் விண்ணப்பிப்பார்கள். அதிலும் கூட குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்கள் அல்லது தாய்மார்கள் கருவுற்று இருக்கும் குடும்பங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். இதன் மூலம் அரசு வீடுகளை பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அதிகரிக்கும்.

இது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறுகையில், "குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு அரசு செய்யும் உதவி இது! குழந்தைகளை பெற்று கொள்ள நீங்கள் முடிவு செய்தால்.. அரசு உங்களுடன் இருக்கும் என்பதை ஒவ்வொரு குடும்பமும் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

யோசிக்கும் மக்கள்

இருப்பினும், இந்த சலுகைகள் எந்தளவுக்கு பலனை தரும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட சிங்கப்பூர் மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர், எந்த அரசு கொள்கையும் தங்களை குழந்தை பெற்று கொள்ள வைக்காது என தெரிவித்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் பள்ளி மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றில் உதவிகளை அறிவித்தால் அது மட்டுமே குழந்தைகளை பெற்று கொள்வதை ஊக்குவிக்கும் என மக்கள் கூறியுள்ளனர்.

என்ன நடந்தது

உலகின் அனைத்து நாடுகளை போலவே சிங்கப்பூரும் கூட கடந்த நூற்றாண்டில் மக்கள் தொகையை குறைக்கவே நடவடிக்கை எடுத்தது. 1970களின் தொடக்கத்தில் சிங்கப்பூர் அரசு இரு குழந்தைகள் என்ற பிரசாரத்தை முன்னெடுத்தது. பெரிய குடும்பங்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் வளங்களுக்கு சுமையாக இருக்கும் என்ற அப்போதைய அரசு கருதியிருக்கிறது.

அரசு சொன்னதை கேட்டு சிங்கப்பூர் மக்கள் குழந்தை பிறப்பை குறைத்துள்ளனர். ஆனால், அதுவே இப்போது பிரச்சினையாக மாறிவிட்டது. சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்ததை தொடர்ந்து, 1987ஆம் ஆண்டு மக்கள் தொகை கொள்கையை அரசு மாற்றியது. அதன் பிறகு குழந்தை பிறப்பை ஊக்குவிக்க நிதியுதவிகள் மற்றும் நீண்டகால மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இருப்பினும், குழந்தை பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து வருகிறது.. கடந்த ஆண்டு சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் 0.87 ஆகக் குறைந்தது. குறைந்து வரும் பிறப்பு விகிதம், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை சிங்கப்பூருக்கு இப்போது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதை சிங்கப்பூர் எப்படி சமாளிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+