மொத்த சிங்கப்பூரையும்.. 2 நாட்களாக ஆட்டிப்படைக்கும்.. ஒரே ஒரு குழந்தையின் வீடியோ.. கொந்தளித்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பிரபல வணிக வளாக உணவு விடுதியில் நடந்த ஒரு சிறிய நிகழ்வு தற்போது அந்நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த ஒரு வீடியோ.. தலைமுறை இடைவெளி, தனிமனித எல்லைகள் மற்றும் முதியவர்கள் மீதான வன்முறை குறித்த தீவிர விவாதமாக உருவெடுத்துள்ளது.

சிறுமி ஒருவரின் வீடியோதான் இதற்கு காரணம்.. அந்த வீடியோவில் உணவகத்தில் அமர்ந்திருந்த சிறுமி ஒருவரின் தலையைத் தடவி அன்பை வெளிப்படுத்திய 73 வயது முதியவரை, அச்சிறுமியின் தந்தை கீழே தள்ளிவிட்டு அடிக்கிறார்.

singapore

இந்த சம்பவம் தற்போது சிங்கப்பூரில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட முதியவருக்கு ஆதரவாக சிங்கப்பூர் மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர். அப்படி என்னதான் நடந்தது?

உணவகத்தில் நடந்தது என்ன?

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள வணிக வளாக உணவகத்தில் 'Bei-Ing Wanton Noodle' என்ற பாரம்பரிய நூடுல்ஸ் கடையை யோ சூன் கூன் என்பவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். அந்த கடையில்.. கால்களில் லேசான குறைபாடு உள்ள முதியவர் யோ, வழக்கமாக மேசைகளைப் பிடித்தபடி நடந்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று உணவகத்தில் அவர் நடந்து சென்றபோது, அருகில் ஒரு மேசையில் அமர்ந்திருந்த சிறுமி கியூட்டாக இருந்ததால், பாசத்துடன் அச்சிறுமியின் தலையைத் தொட்டுத் தடவியுள்ளார். ஒரு வயதான தாத்தா சிறுமியின் தலையை தடவி கொடுப்பது போலவே ஐவரும் செய்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் உடனடியாக முதியவரின் கையைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த குழந்தையின் தந்தை (40), முதியவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் முதியவரின் கையைப் பிடித்துப் பலமாகப் பின்னோக்கித் தள்ளினார். இதில் நிலைதடுமாறிய 73 வயது முதியவர் தரையில் பலமாக விழுந்தார்.

வைரலான சிசிடிவி; கொந்தளித்த இணையவாசிகள்

இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. பாதிக்கப்பட்ட முதியவரின் மகன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது காட்டுத்தீயாகப் பரவியது.

இணையத்தில் இது குறித்து இருவேறு கருத்துகள் எழுந்தாலும், பெரும்பாலான மக்கள் முதியவர் மீதான தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தனர்.

பெற்றோரின் அனுமதியின்றி முன்பின் தெரியாத குழந்தைகள் மீது கை வைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், ஒரு முதியவர் அன்பாகத் தொட்டதற்கு அவரைத் தரையில் தள்ளித் தாக்குவது எந்த வகையிலும் நியாயமற்ற கொடூரமான செயல் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கொதித்தெழுந்தனர்.

குடும்பத்தினரின் வேதனை

சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, தாக்கிய நபர் முதியவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒரு குளிர்பானத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளார். எனினும், கீழே விழுந்ததால் ஏற்பட்ட உடல் வலி முதியவருக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முதியவரின் மகன் கூறுகையில், "அவர் மன்னிப்புக் கேட்டதை நாங்கள் ஏற்கிறோம்; ஆனால், என் தந்தை ஏற்கனவே இடுப்பு மற்றும் கால் வலியால் அவதிப்பட்டு வந்தவர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவருக்குக் கடுமையான முதுகுவலி ஏற்பட்டுள்ளது. ஒரு குளிர்பானமும் ஒரு வார்த்தை மன்னிப்பும் என் தந்தையின் உடல் காயத்தையும் வலியையும் போக்கிவிடாது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், சிங்கப்பூர் காவல்துறை 40 வயது நபரை அடையாளம் கண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஆதரவாகக் குவிந்த மக்கள் கூட்டம்

முதியவருக்கு நடந்த அநீதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிங்கப்பூர் மக்கள் தாமாக முன்வந்து Bei-Ing Wanton Noodle கடைக்கு வருகை தரத் தொடங்கினர். நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து உணவை வாங்கிச் சென்றனர்.

முதியவர் யோவிடம் நேரில் நலம் விசாரித்து, அவருக்கு ஆறுதலும் ஆதரவும் தெரிவித்தனர். மக்களின் இந்த அதீத அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோன முதியவர், கூட்ட நெரிசலால் சற்று தலைசுற்றல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, முதியவரின் உடல்நிலை சீராகவும் ஓய்வு எடுக்கவும் வேண்டி கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+