சிங்கப்பூரில் தொடரும் கொரோனா தாக்குதல்- மேலும் 596 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: ஐரோப்பிய நாடுகளைப் போல சிங்கப்பூரில் கொரோனாவின் உக்கிரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 596 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா நாடுகளில் சிங்கப்பூரில் கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு நேற்று ஒரே நாளில் 942 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Singapore reports another 942 coronavirus cases in single day

இதனைத் தொடர்ந்து கொரோனாவால் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது. மொத்தம் 5,944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மேலும் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மொத்தம் 6,588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர். ஆகையால் வெளிநாட்டினர் தங்கும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் படுதீவிரமாக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+