கொரோனா: சிங்கப்பூரில் 12 ஆயிரத்தை தாண்டியது- இலங்கையில் 416; மலேசியா, பாகிஸ்தானிலும் உக்கிரம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் புதிதாக 897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்கள்தான் கொரோனா மையங்களாக உருவாகி உள்ளன. நாள்தோறும் 700 முதல் 1400 வரை என்கிற எண்ணிக்கையில் புதியதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

12 ஆயிரத்தை தாண்டியது
இன்றும் ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதிலும் பெரும்பாலானோர் வெளிநாட்டினர்தான். சிங்கப்பூரை சேர்ந்த 13 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 12,075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் சிங்கப்பூரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12.

இலங்கையில் புதியதாக 48 பேருக்கு தொற்று
இதேபோல் இலங்கையில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்திருக்கிறது. இலங்கையில் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்கள் எண்ணிக்கை 7 ஆகும். இலங்கையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 109.

100 நெருங்கும் மலேசிய மரணங்கள்
மலேசியாவில் கொரோனாவால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96. அதேபோல் மேலும் 88 பேருக்கு மலேசியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5691 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் 242 பேர் பலி
பாகிஸ்தானிலும் கொரோனா உக்கிரமாக தாக்கி வருகிறது. இங்கு இதுவரை 242 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனாவால் மொத்தம் 11,562 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில்தான் மிக அதிகமாக 4,851 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானில் மே 9-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications