சிங்கப்பூரில் செல்போன், பாஸ்போர்ட் என அனைத்தையும் தொலைத்த இந்திய பெண்! அடுத்து நடந்த அதிசயம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த ஒரு இசைத் திருவிழாவின் போது பாஸ்போர்ட், பணம் மற்றும் போன் என அனைத்தையும் தொலைத்துவிட்டுத் தவித்த இந்தியப் பெண்ணுக்கு, முற்றிலும் அந்நியமான வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலுக்கு எதிரே நடந்த 'அல்ட்ரா சிங்கப்பூர்' இசைத் திருவிழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியின் விதிமுறைப்படி உடமைகளை வெளிப்படையான பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அந்தப் பெண் தனது போன், பாஸ்போர்ட் மற்றும் பணப்பையை தனது சிங்கப்பூர் நண்பரின் ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டார்.

அப்பெண் தனியாக செல்லவில்லை. தனது தோழிகளுடன்தான் சென்றிருக்கிறார். இருப்பினும், இந்த பெண் மட்டும் கூட்ட நெரிசலில் தொலைந்துவிட்டார். கூட்ட நெரிசலில் தனது நண்பர்களைப் பிரிந்த அந்தப் பெண், கையில் எதுவுமே இல்லாத நிலையில் நள்ளிரவில் தனியாக நின்றார். யோசித்து பாருங்கள், ஒரு பெரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் நீங்கள் தொலைந்து போய்விட்டீர்கள் எனில் உங்களுக்கு எப்படி இருக்கும்?
உங்களை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால், உங்களை யாருக்கும் தெரியாது. உங்களுக்கும் யாரையும் தெரியாது. ஒருவித இனம் புரியாத பயம் தொற்றிக்கொள்ளும். அதேபோலத்தான் அந்த பெண்ணுக்கும் பயம் தொற்றிக்கொண்டிருக்கிறது. அழுதிருக்கிறார்.பின்னர் அங்கிருந்து வெளியேறும் வழியைக் கண்டுபிடித்தார். இருட்டாகிவிட்டதால் அங்கு நண்பர்களைக் கண்டுபிடிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார். அவரிடம் தொலைபேசி இல்லை, பாஸ்போர்ட் இல்லை, பணப்பை இல்லை, பயன்படுத்த முடியாத ஒரு காலி தண்ணீர் பாட்டில் மட்டுமே இருந்தது.
வெளியே வந்த அவர், ஒருவரை ஒருவர் தொலைத்துவிட்டால் சேர வேண்டிய சந்திப்பு இடமாக அவர்கள் முடிவு செய்திருந்த அடையாளத்தை நினைவுகூர்ந்தார். அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற அடையாள இடத்தை அடைந்த அவர், அமர ஒரு பெஞ்சைக் கண்டுபிடித்து மேலும் சிறிது நேரம் அழுதார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்த அவர், சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் செல்லலாமா என்று யோசித்தார்.
அந்த காத்திருப்பு அவருக்கு மனக் குழப்பத்தையும், திசையறியாத அலைச்சலையும் கொடுத்தது. என்ன செய்வது என்று கூட தெரியாமல் மனதளவில் மிகவும் துன்பப்பட்டார். ஆனால், அப்போது தனக்குச் சரி என்று தோன்றியதை அவர் செய்தார்.
நேராக நடந்தார். வழியில் தென்பட்ட இருவரிடம் செல்போனை கேட்டார். தனது தோழிகளை அழைக்க அவர்களின் செல்போனை பயன்படுத்த முடியுமா என்று கேட்டார். இதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. இந்த பெண்ணுக்கு தனது தோழிகளின் செல்போன் எண் தெரியாது. எனவே மீண்டும் தேம்பி தேம்பி அழுதிருக்கிறார். இதனையடுத்து அந்த இரண்டு பேர் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லியுள்ளனர். அவர்கள் தங்களை வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
அவர்கள் அப்பெண் தங்கியிருந்த ஓட்டலின் பெயர் நினைவிருக்கிறதா? என்று கேட்டனர். பின்னர் அந்த ஓட்டலுக்கு டாக்சியில் செல்வதற்கான பணத்தை கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பெண் பத்திரமாக ரூம் திரும்பியிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications