தமிழக நிதி நிலைமையை சீர்செய்திருக்கிறோம்!வருவாய் பற்றாக்குறையை குறைத்திருக்கிறோம்! ஸ்டாலின் தகவல்!
சிங்கப்பூர்: திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற காலம் என்பது மிகவும் சவாலான காலம் என்றும் வருவாய் பற்றாக்குறையைக் குறைத்திருக்கிறோம் எனவும் சிங்கப்பூர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு 500,000 கோடி ரூபாய் கடன் என்றதொரு கடினமான சூழலில் தான் தாம் முதல்வராக பதவியேற்றேன் எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக சிங்கப்பூரின் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு;

''பூக்கள் நிறைந்த அழகிய சாலையில் நான் பயணம் செய்யவில்லை. முற்றிலும் பாழ்படுத்தப்பட்ட சாலையில் - குண்டும் குழியும் - மேடும் பள்ளமும் - கல்லும் முள்ளும் ஆணியும் கொண்ட சாலையில் பயணம் செய்வதைப் போலத்தான் ஆட்சிக்கு வந்த முதல் சில மாதங்கள் இருந்தன.
தமிழக அரசுக்கு 500,000 கோடி ரூபாய் கடன் என்றதொரு கடினமான சூழலில்தான் முதல்வராக நான் பதவியேற்றேன். அந்த நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கி இருந்தது. அப்பேரிடரிலிருந்து மக்களைக் காப்பதே முதல் கடமையாக இருந்தது.
அதனைச் சரியாக நிறைவேற்றி, அதன் பிறகு தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சவாலான பணியை மேற்கொள்ளத் தொடங்கினோம். நிதி நிலைமை ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்திருக்கிறோம். உற்பத்தி பெருகி உள்ளது. புதிய நிறுவனங்கள் வந்துள்ளன. வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இருப்பினும், நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, இவற்றையெல்லாம் சவால்களாக நினைக்கவில்லை. பொதுவாழ்க்கையில், அரசு நிர்வாகத்தில் இவற்றை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எதிர்மறையாகப் பேசி காரணங்களைத் தேடுவதைவிட, நேர்மறையாகச் சிந்தித்து சாதனைகளைச் செய்வதையே நான் விரும்புகிறேன். அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன்.''
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications