Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூரில் சாதித்த தமிழர்! முதலாளிக்கு எதிராக வழக்கு போட்டு $73,500 நஷ்டஈடு வாங்கி அசத்தல்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழர் ஒருவர் விபத்தில் சிக்கியிருந்த நிலையில், அவருக்கு உதவி செய்ய அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. இதனையடுத்து அவர் அந்நாட்டு நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த ராமலிங்கம் முருகன் எனும் நபர் சிங்கப்பூரில் உள்ள ரிகல் மரைன் சர்வீசஸ் எனும் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவர் உட்பட 24 தொழிலாளர்களை நிறுவனம் லாரியில் ஏற்றிக்கொண்டு பணியிடத்திற்கு சென்றுக்கொண்டிருந்தது. அந்த சமயம் இடப்பற்றாக்குறை காரணமாக அவர் லாரியிலிருந்து தவறி விழுந்திருக்கிறார். இதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

The Singaporean court ordered compensation for the Tamil who was involved in the accident

இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த சக தொழிலாளர்கள், மருத்துவ செலவுகளுக்காக நிறுவனத்தை அணுகியுள்ளனர். ஆனால் நிறுவனம், இந்த விபத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உதவி செய்ய மறுத்துவிட்டது. இதனையடுத்து சக தொழிலாளர்களும், குடும்பத்தினரும் ராமலிங்கத்தின் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவி இருக்கின்றனர். அதேநேரம் ராமலிங்கம் தனக்கு உதவ மறுத்த நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

வழக்கு விசாரணையில், நிறுவனம் தரப்பில், "ராமலிங்கம் லாரியிலிருந்து இறங்கும்போது தவறி விழுந்துவிட்டார். எனவே இதற்கு நிறுவனம் பொறுப்பாகாது" என்ற கூறியிருக்கிறது. ஆனால் ராமலிங்கம் தன்னுடன் பணியாற்றிய தொழிலாளர்களின் உதவியுடன் நடந்த சம்பவத்தை சாட்சியுடன் கூறியுள்ளார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தொழிலாளர்களின் நிலைமை குறித்து கவலை எழுப்பியது.

வளர்ந்த நாடான சிங்கப்பூரில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை சுட்டிக்காட்டிய நீதிபதி, விபத்திற்கு நிறுவனம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி ரூ.6 கோடியை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். சிங்கப்பூரில் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே பலமுறை இதுபோன்ற விபத்துக்கள் நடந்திருக்கிறது. இதில் தமிழர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர்.

என்னதான் அந்த நாடு வளர்ந்திருந்தாலும், அங்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களை கொத்தடிமைகள் போல நிறுவனங்கள் நடத்துகின்றன. இருப்பினும் பொருளாதார தேவைக்காக தொடர்ந்து இந்தியர்கள் இதுபோன்ற வளர்ந்த நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+